முகப்புகோலிவுட்

தனுஷின் ‘வடசென்னை’ செட் மேக்கிங் வீடியோ

  | October 09, 2018 16:38 IST
Dhanush

துனுக்குகள்

  • படத்தை அக்டோபர் 17-ஆம் தேதி ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர்
  • இதன் டீசர் & பாடல்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது
  • இப்படம் மூன்று பாகங்களாக வெளியாகுமாம்
‘விசாரணை’ படத்தின் வெற்றிக்கு பிறகு வெற்றிமாறன் இயக்கத்தில் ரெடியாகி வரும் படம் ‘வடசென்னை’. இதில் ஹீரோவாக தனுஷ் நடித்துள்ளார். மேலும், ஐஸ்வர்யா ராஜேஷ், ஆண்ட்ரியா, டேனியல் பாலாஜி, கிஷோர், இயக்குநர்கள் சமுத்திரக்கனி, அமீர், சுப்ரமண்யம் சிவா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இதற்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார், வெங்கடேஷ் படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார். கேங்ஸ்டர் த்ரில்லரான இதனை தனுஷ் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘வுண்டர்பார் ஃபிலிம்ஸ்’ மூலம் தயாரித்துள்ளார். இப்படம் மூன்று பாகங்களாக வெளியாகுமாம்.
 

சமீபத்தில், படத்தின் பார்ட் 1-க்கான ஃபர்ஸ்ட் லுக் டீசர் மற்றும் பாடல்கள் வெளியிடப்பட்டது. படத்தை அக்டோபர் 17-ஆம் தேதி ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர். தற்போது, படத்தின் செட் மேக்கிங் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்