விளம்பரம்
முகப்புகோலிவுட்

எளிமையில் வலிமை - விஐபியின் மேஜிக்

  | August 10, 2017 19:50 IST
Vip 2 Movie

துனுக்குகள்

  • தனுஷை தவிர மிகப்பெரிய நட்சத்திரங்கள் யாருமில்லாமல் வெளிவந்த படம்
  • வேலை தேடி அலைந்த பலரின் வலியை மிகச்சிறப்பாக பிரதிபலித்தது விஐபி
  • பணக்காரனின் திமிர், அதை மிடில் க்ளாஸ் எனும் திமிரை கொண்டே அடக்குதல்
மூன்று வருடமாகிறது, வேலையில்லா இளைஞர்கள் தங்களை விஐபி என்று குறிப்பிட தொடங்கி.
ஒரு திரைப்படம் மக்களுக்கு பிடிப்பதற்கும், அடையாளமாகவே மாறுவதற்கு பல வித்தியாசங்கள் உள்ளன.

மிகக்குறைந்த பொருட்செலவில் தனுஷை தவிர மிகப்பெரிய நட்சத்திரங்கள் யாருமில்லாமல் வெளிவந்த வேலையில்லா பட்டதாரி மக்கள் மனதில் இடம்பிடிக்கவும், ஒரு தரப்பின் அடையாளமாகவுமே மாறிப்போக பல காரணங்கள் உண்டு !!

முதலில் திரைக்கதை, வேலையில்லா பட்டதாரி படத்தின் கதை மிகவும் எளிமையான ஒன்று, ஒரு வகையில் அதுவே அதை மக்களிடம் சென்று சேர மிகப்பெரிய கருவியாக இருந்திருக்கிறது எனக்கூறலாம்.
வேலையில்லாத மிடில் கிளாஸ் இளைஞன், அவன் சிறிய வீடு, அதில் அவன் படும் அல்லல்கள், அவன் சுயமரியாதையை தூண்டும் சின்ன சின்ன சீண்டல்கள் செய்யும் கோவக்கார அப்பா, நன்றாக படித்து வேலைக்கு செல்லும் தம்பி, தன்னை தானே சுய பகடி செய்யும் வகையில் இருந்த காட்சியமைப்பு என அனைத்துமே எளிய மக்கள் அன்றாடம் கடந்து வரும் ஒன்றாக இருந்ததால் நாயகனின் இடத்தில் அவர்களால் நின்று பார்க்கவும், அவனின் உணர்ச்சிகளை புரிந்து கொள்ளவும் முடிகிறது...

படத்தை பார்த்து தன் நாய்களுக்கு ஹாரி பாட்டர் என பெயர் வைத்த பலரின் கதையை நான் அறிவேன், கதைக்கு மிகப்பெரிய பங்களிப்பாக அது தோன்றாவிட்டாலும் கூட இது போன்ற எளிய விஷயங்களில் கொடுக்கப்பட்டிருக்கும் கவனம் அதை மக்களிடம் மேலும் எளிமையாக கொண்டு செல்ல வைக்கிறது

இந்த படம் வெளியான காலகட்டமும் முக்கியத்துவம் வாய்ந்தது, இதற்கு மேல் கல்லூரிகள் திறக்க இடமில்லை என்று கூறும் அளவிற்கு கல்லூரிகளை கட்டி பொறியியலை திகட்ட திகட்ட படித்த நம் மக்களுக்கு, பொறியியல் பட்டதாரிகளின் வேலையின்மையால் அதன் மேல் இருந்த மோகம் கொஞ்சம் கொஞ்சமாக விலகி கொண்டிருந்த வேலையில் வெளியானது வேலையில்லா பட்டதாரி.

தான் படித்த துறைக்கான வேலை கிடைக்காமல் கிடைக்கும் ஏதோ ஒரு வேலையை செய்ய மனமில்லாமல் வேலை தேடி அலைந்த பலரின் வலியை மிகச்சிறப்பாக பிரதிபலித்தது விஐபி, உண்மையாகவே இதே பிரச்சனையால்

குடும்பங்களை கவரும் வகையிலிருந்த கதைக்களம், வெள்ளந்தி தாயின் மனம் வருடும் பாசம், அவள் கண்ணாடி வழியாக உலகை காணும் இளைஞன், அப்படி தட்டு தடுமாறி ஒரு விடியலுக்காக போராடும் மிடில் க்ளாஸ் இளைஞனின் மீது தொடுக்கப்படும் தகுதியற்ற பணக்காரனின் திமிர், அதை மிடில் க்ளாஸ் எனும் திமிரை கொண்டே அடக்குதல் என ஒவ்வொன்றுமே எளிய மக்கள் தினந்தோறும் எதிர்கொள்ளும் விஷயமாவதால் அனைத்துமே மக்களுக்கு நெருக்கமாக விஐபி ஐ கொண்டு சென்றது ...

மக்களில் ஒருவராக இருக்கும் தனுஷிடம் இயல்பான தோற்றம் நடிப்பு, அனிருத்தின் இசை, கொஞ்சம் கூட நேர விரயமில்லாமல் அமைக்கப்பட்ட திரைக்கதை, தமிழ் நாட்டின் நிறத்தில் நாம் தினந்தோறும் பார்க்கும் பெண்களை போல இருந்த அமலா பாலின் நளினம் என அனைத்துமே பல்வேறு வயதிலிருக்கும் பலதரப்பட்ட ரசிகர்களையும் திருப்தி படுத்தும் விதத்தில் அமைக்கப்பட்ட காட்சியமைப்பிற்கு வித்திட்டது
எளிமையான அதே சமயம் வலிமையான மசாலாவாக விஐபி வந்திருந்தது...

படம் பார்த்த மக்கள் ரகுவரனை மற்றுமொரு கதாபாத்திரமாக காணாமல் தங்கள் பிரதிநிதியாக கொண்டாடியதே வேலையில்லா பட்டதாரியின் வெற்றி...

வெளியான வருடத்தின் இரண்டாவது மிகப்பெரிய வசூலை குவித்து ப்ளாக்பஸ்டரானது விஐபி என்பது குறிப்பிடத்தக்கது.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்