முகப்புகோலிவுட்

முதல்கட்ட படப்பிடிப்பை நிறைவுசெய்த 'வர்மா' டீம்

  | March 10, 2018 10:32 IST
Dhruv Vikram

துனுக்குகள்

  • ‘அர்ஜுன் ரெட்டி’ டோலிவுட் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது
  • விக்ரமின் மகன் துருவ் அறிமுகமாகும் முதல் படம் இதுதானாம்
  • நேபாளம் கத்மண்டு நகரில் படத்தின் ஷூட்டிங் நடைபெற்று வந்தது
டோலிவுட்டில் ‘பெல்லி சூப்புலு’ புகழ் விஜய் தேவரகொண்டா நடித்து கடந்த ஆண்டு (2017) வெளியான படம் ‘அர்ஜுன் ரெட்டி’. சந்தீப் ரெட்டி இயக்கியிருந்த இதில் விஜய் தேவரகொண்டாவிற்கு ஜோடியாக ஷாலினி பாண்டே டூயட் பாடி ஆடியிருந்தார். இப்படம் ரசிகர்களிடையேவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இதன் தமிழ் ரீமேக்கில் விஜய் தேவரகொண்டா ரோலில் விக்ரமின் மகன் துருவ் நடிக்கிறார்.

கோலிவுட்டில் முன்னணி நடிகர்களில் ஒருவரான விக்ரமின் மகன் துருவ் அறிமுகமாகும் முதல் படம் இதுதானாம். ‘வர்மா’ என டைட்டிலிட்டுள்ள இப்படத்தை இயக்குநர் பாலா இயக்கி வருகிறார். இதனை ‘E4 எண்டர்டெயின்மெண்ட்’ நிறுவனம் தயாரிக்கிறது. ரதன் இசையமைக்கும் இதற்கு சுகுமார் ஒளிப்பதிவு செய்கிறார், ராஜு முருகன் வசனம் எழுதியுள்ளார்.

சமீபத்தில், நேபாளம் கத்மண்டு நகரில் துவங்கிய இந்த படத்தின் ஷூட்டிங் பரபரப்பாக நடைபெற்று வந்தது. தற்போது, முதற்கட்ட படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவு பெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது. வெகு விரைவில் படத்தில் நடிக்கவிருக்கும் ஹீரோயின் மற்றும் இதர நடிகர்களின் பட்டியல் ட்வீட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்