முகப்புகோலிவுட்

படப்பிடிப்பின் போது கீர்த்தி சுரேஷுக்கு படுகாயம்? – பரவும் வீடியோ

  | November 09, 2017 16:19 IST
Kunjiramante Kuppayam

துனுக்குகள்

  • சமூக வலைதளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது
  • இவ்வீடியோவில் உள்ள நடிகை கீர்த்தி சுரேஷ் என கூறப்பட்டது
  • ‘KUNJIRAMANTE KUPPAYAM’ படத்தின் படப்பிடிப்பின் போது இது நடந்ததாம்
சமூக வலைதளங்களில் நேற்று (நவம்பர் 8-ஆம் தேதி) மாலை முதல் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட இந்த வீடியோவில் நடிகை ஒருவர் நடனம் ஆடும்போது கீழே விழுந்தவுடன், அவரை தூக்க அனைவரும் செல்வதுபோல் உள்ளது. இவ்வீடியோவில் உள்ள நடிகை கீர்த்தி சுரேஷ் என கோலிவுட்டில் தண்டோரா போடப்பட்டது.


இது குறித்து கீர்த்தி சுரேஷ் தரப்பில் இருந்தும் விளக்கம் அளிக்கப்பட்டது. கீர்த்தி சுரேஷ் தற்போது, பவன் கல்யாணின் படத்தில் நடிப்பதற்காக பல்கேரியா சென்றுள்ளதாகவும், அந்த வீடியோவில் இருப்பது அவர் இல்லையென்றும் கூறியிருந்தனர். இந்நிலையில், வீடியோவில் இருந்தது மலையாள நடிகை லிண்டா குமார் (LINDA KUMAR) என தகவல் வெளியாகியுள்ளது. மேலும், லிண்டா நடித்து வரும் ‘KUNJIRAMANTE KUPPAYAM’ என்ற மலையாள படத்தின் படப்பிடிப்பின் போது தான் இந்த சம்பவம் நடந்ததாம்.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்