முகப்புகோலிவுட்

அனுராக் காஷ்யப்பை சந்தித்த இயக்குநர் ரஞ்சித்

  | April 24, 2019 21:32 IST
Anurag Kashyap

துனுக்குகள்

  • இந்தி பட இயக்குநர் அனுராக் காஷ்யப் புதிய முயற்சிகளை எடுத்து வருபவர்
  • ரஞ்சித் இயக்கிய காலா படத்தை பார்த்து விட்டு சந்திக்க அழைப்பு விடுத்துள்ளா
  • ரஞ்சித் தயாரிப்பில் வெளியான பரியேறும் பெருமாளையும் பார்த்துள்ளார்

பாலிவுட் திரையுலகில் மிக முக்கியமான இயக்குநராக பார்க்கப்படும் அனுராக் காஷ்யப்பை இயக்குநர் பா.ரஞ்சித் சந்தித்துள்ளார். அனுராக் காஷ்யப் பல புதிய முயற்சிகளின் மூலம் இந்திய சினிமாவை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் முனைப்பில் இருப்பவர். பா. ரஞ்சித் தான் நம்கிற அரசியலை மையப்படுத்தி சினிமா இயக்குவதில் முன்னோடி. இந்த இருவரும் சந்தித்திருப்பது  பாலிவுட்டில் உள்ளவர்களை புருவம் உயர்த்தி பார்க்க வைத்துள்ளது. 

சமீபத்தில் காலா, பரியேறும் பெருமாள் படங்களை பார்த்த இயக்குநர் அனுராக். இயக்குநர் பா.ரஞ்சித்தை சந்திக்க அழைப்பு விடுத்துள்ளார். அதன் பொருட்டே இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது.

இந்தச் சந்திப்பில் இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கி, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான "காலா" திரைப்படம் குறித்து சிலாகித்து பேசியிருக்கிறார் அனுராக்.

அந்தப் படத்தின் அரசியல், தொழிற்நுட்ப நேர்த்தி ஆகியவை குறித்தும் விரிவாகப் பேசியிருக்கிறார். மேலும் பா.ரஞ்சித் தயாரிப்பில், மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான பரியேறும் பெருமாள் படம் குறித்தும் சிலாகித்துப் பேசிய அனுராக், இந்திய சமூகத்தில் சாதிய ஏற்றத்தாழ்வு, வர்க்கம் , பெண்ணடிமைத்தனம் குறித்து கலைஞர்களுக்கு சரியான புரிதல் வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

"இந்திய அளவில் தலித் அரசியலை வெளிப்படையாகவும், நேர்மையாகவும் துணிச்சலாக பேசக்கூடிய படைப்பாளியான உங்களுடன் இணைந்து பணியாற்ற விரும்புகிறேன்" என்றும் தனது விருப்பத்தினை தெரிவித்திருக்கிறார் அனுராக் காஷ்யப்.    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்