முகப்புகோலிவுட்

கார் விபத்தில் சிக்கிய இயக்குநர் கெளதம் மேனன்

  | December 07, 2017 13:26 IST
Gautham Menon Car Accident

துனுக்குகள்

  • ‘மின்னலே’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர்
  • இயக்குநராக கெளதம் மேனன் கைவசம் 2 படங்கள் உள்ளது
  • சிறு காயங்களுடன் கெளதம் மேனன் உயிர் தப்பினாராம்
‘மின்னலே’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் கெளதம் மேனன். இதனைத் தொடர்ந்து ‘காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, வாரணம் ஆயிரம், விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா’ போன்ற பல வெற்றிப் படங்களை இயக்கியுள்ளார். தற்போது, இயக்குநராக கெளதம் மேனன் கைவசம் தனுஷின் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ மற்றும் விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’ ஆகிய இரண்டு படங்கள் உள்ளது.
 
இந்நிலையில், இன்று (டிசம்பர் 7-ஆம் தேதி) காலை செம்மஞ்சேரி அருகே கெளதம் மேனன் பயணித்த கார் டிப்பர் லாரியில் மோதி விபத்தானதாக தகவல் வெளியாகியுள்ளது. கார் நொறுங்கிய நிலையில், சிறு காயங்களுடன் கெளதம் மேனன் உயிர் தப்பினாராம்.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்