முகப்புகோலிவுட்

“படம் எடுப்பதை விட சாதியை ஒழிப்பதே என் வேலை!”- கோபி நயினார் #Exclusive

  | December 15, 2018 13:18 IST
Director Gopi Nainar

துனுக்குகள்

  • விரைவில் கோபி நயினாரின் படம் வெளியாகும்
  • தவறான தகவல்களாள் நான் சோர்வடைய மாட்டேன் , கோபி நயினார்
  • சாதி ஒழிப்பு களத்தில் தொடர்ந்து இயங்குவேன் அதுதான் என்னுடடைய பணி
பல்வேறு போராட்டங்களுக்கு மத்தியில் ஒடுக்கப்பட்ட சமூகத்தில் இருந்து, பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கிய கிராமத்தில் இருந்து வந்தவர் அறம் இயக்குநர் கோபி நயினார்.

சமூக அக்கரைகொண்ட அறம் என்கிற ஒரு படைப்பை மக்களிடையே கொண்டு சென்று பெரும் வரவேற்பையும் வெற்றியும் பெற்றவர்.

அடுத்து கோபியின் படைப்பு என்னவாக இருக்கும் என்று மக்களின் எதிர்ப்பார்ப்பு அதிகரித்து இருந்து.
கோபி நயினார் திரைப்படம் எடுப்பது மட்டும் அவருடைய பணி இல்லை இந்த சமூகத்தில் படிந்து கிடக்கும் சாதிக்கெதிராய் களம் காணும் களப்போராளியாகவும் இருந்து வருகிறார்.

திரைத்துறைக்கு வரும் போது அவர் எவ்வளவு சர்ச்சைகளை எதிர்கொண்டாரோ இன்றளவும் அதை எதிர்கொண்டு வருகிறார். அறம் படத்திற்கு பிறகு ஜெய்யுடன் இணைந்து அடுத்த படத்திற்கு தயாரானார் கோபி நயினார்.

இந்த செய்தி வேகமாக பரவியது. கோபி நயினாரின் அடுத்த படத்திற்கு காத்துக்கொண்டிருந்த அனைவரும் மகிழ்ச்சியில் இருந்தனர்,

சமீபத்தில் கோபி படத்தை கைவிட்டார் என்கிற செய்தி வேகமாக பரவ அவரிடம் பேசினேன்,

“ என்னுடைய படைப்பை வெளி கொண்டு வருவதில் நான் உறுதியாக இருக்கிறேன். என்னை பிடிக்காதவர்கள் சிலர் இது போன்ற தவறான செய்திகளை பரப்பி வருகின்றனர். 

அது முற்றிலும் தவறு, இப்படி கூறுவதனால் என்னுடைய வேலையில் நான் ஒரு போது தொய்வடைய மாட்டேன்.

சில சமயங்களில் எனக்கு மிரட்டல்கள் கூட வருகிறது அதையெல்லாம் நான் பொருட்படுத்துவது இல்லை. நப்பு முரன், பகை முரன் இரண்டிற்கும் வித்யாசம் இருக்கிறது. என்னுடைய பிரச்னையை நான் நப்பு முரணாக பார்க்கிறேன்.

இங்கு இருக்கக்கூடிய பிரச்னையே தோழமை என்பது இல்லை என்பதுதான். 

என்னுடைய வேலை என்பது படம் எடுப்பது மட்டுமல்ல சாதியை ஒழிப்பதே என்னுடைய பணி.

ஆகையால் மக்கள் புரளிகளை நம்ப வேண்டாம். நான் தொடர்ந்து இயங்கிக்கொண்டே இருப்பேன் என்னுடைய இயக்கத்தை யாராலும் தடுக்க முடியாது'” என்றார் கோபி நயினார்.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்