முகப்புகோலிவுட்

"12 மணிநேர உழைப்பு 3 கெட்டப்" - 'பூமராங்' ஆச்சரியம் பகிரும் கண்ணன்

  | June 13, 2018 11:57 IST
Boomerang Movie

துனுக்குகள்

  • கண்ணன் இயக்கியிருக்கும் படம் 'பூமராங்'
  • அதர்வா மேகா ஆகாஷ் இப்படத்தில் நடித்துள்ளனர்.
  • படத்தில் மூன்று கெட்டப்பில் நடித்திருக்கிறார் அதர்வா.
'இவன் தந்திரன்' படத்துக்கு பின் கண்ணன் இயக்கியிருக்கும் படம் 'பூமராங்'. அதர்வா, மேகா ஆகாஷ், இந்துஜா, உபன் படேல், ஆர்.ஜே.பாலாஜி, சதீஷ், சுஹாசினி மணிரத்னம் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். 

படம் பற்றி இயக்குநர் கண்ணன் கூறுகையில், "பூமராங் படத்தின் திரைக்கதையை எழுதி முடித்தவுடனேயே, படத்தை முடிக்க 90 நாட்கள் தேவைப்படும் என்று தெளிவாக தெரிந்தது. மேலும் மிக அதிகமான முன் தயாரிப்பு பணிகளில் ஈடுபட்டோம். 4 வெர்சன் திரைக்கதை இருந்தது, ஒரு நாளைக்கு 2 காட்சிகளை எடுக்க திட்டமிட்டிருந்தோம். அதர்வா, மேகா ஆகாஷ், இந்துஜா ஆகியோரின் ஒத்துழைப்பு இல்லாமல் இருந்திருந்தால் 45 நாட்களில் படப்பிடிப்பை முடிப்பது சாத்தியமில்லாத ஒன்றாக மாறியிருக்கும்.

முழு படமும் அதர்வாவை சார்ந்தது. அவரிடம் இருந்து 3 வித்தியாசமான தோற்றங்கள் இந்த படத்துக்கு தேவைப்பட்டது. புரோஸ்தடிக் மேக்கப் செயல்முறையின் போது மிகவும் சுறுசுறுப்பாக இருந்தார். மிகச்சிறந்த புரோஸ்தடிக் ஒப்பனை கலைஞர்களான ப்ரீத்தி ஷீல் சிங் மற்றும் மார்க் ட்ராய் டிஸோசா 12 மணி நேர உழைப்பிற்கு பிறகு அதர்வாவுக்கு சிறந்த, சரியான தோற்றத்தை கொண்டு வந்தனர்" என்றார்.
போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் 60 நாட்கள் கால அளவில் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது, ஆகஸ்ட் மாதம் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டிருக்கிறார்கள்.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்