முகப்புகோலிவுட்

ரஜினி படத்தில் நடிக்கிறாரா ஃபஹத் பாசில்?

  | July 14, 2018 11:04 IST
Rajinikanth 165

துனுக்குகள்

  • ரஜினி கைவசம் ‘2.0’ மற்றும் கார்த்திக் சுப்புராஜ் படம் என 2 படங்கள் உள்ளது
  • இப்படத்தை ‘சன் பிக்சர்ஸ்’ நிறுவனம் மிக பிரம்மாண்டமாக தயாரிக்கிறது
  • மலையாளத்தில் பிரபல நடிகராக வலம் வருகிறார் ஃபஹத் பாசில்
பா.இரஞ்சித்தின் ‘காலா’ படத்திற்கு பிறகு ரஜினிகாந்த் கைவசம் ஷங்கரின் ‘2.0’ மற்றும் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் படம் என 2 படங்கள் உள்ளது. இதில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் படத்தை ‘சன் பிக்சர்ஸ்’ நிறுவனம் மிக பிரம்மாண்டமாக தயாரிக்கிறது.
 
‘ராக்ஸ்டார்’ அனிருத் இசையமைக்கும் இதற்கு திருநாவுக்கரசு ஒளிப்பதிவு செய்கிறார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தில் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி,பாபி சிம்ஹா, சனந்த் ரெட்டி, மேகா ஆகாஷ், தீபக் பரமேஷ், குரு சோமசுந்தரம் ஆகியோர் நடிக்கின்றனர்.
 
தற்போது, இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க பிரபல மலையாள நடிகரும், நடிகை நஸ்ரியாவின் கணவருமான ஃபஹத் ஃபாஸிலிடம் பேச்சு வார்த்தை நடந்து வருவதாக தகவல் வெளியானது. ஆனால், அந்த செய்தி வெறும் வதந்தியே எனத் தெரிவித்திருக்கிறார் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ். ரஜினியின் 165-வது படமான இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ் ப்ளான் குறித்த அப்டேட் விரைவில் ட்வீட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்