முகப்புகோலிவுட்

“ழகரம் “ எப்படி உருவானது மனம் திறக்கும் இயக்குனர் க்ரிஷ்

  | December 27, 2018 20:12 IST
Director Krish

துனுக்குகள்

  • "ப்ரொஜெக்ட்" நாவலை அடிப்படையாகக்கொண்டு உருவாகும் படம்
  • நந்தா இப்படத்தில் நடித்திருக்கிறார்
  • பிப்ரவரி மாதம் படத்தை வெளியிட திட்டமிட்டிருக்கிறோம்
நடிகர் நந்தா, ஈடன் குரோஷி நடிப்பில் தயாரிக்கொண்டிருக்கம் திரைப்படம் “ழகரம்”. இப்படத்தை பால் டிப்போ கதிரேசன் தயாரிக்கிறார்.

தமிழ் வரலாற்று சிந்தனையை அடிப்படையாகக் கொண்டு வெளிவந்த “ப்ரொஜெட்” எனும் நாவலின் கதைதான் ழகரம்.

ஏற்கனவே தமிழில் முள்ளும் மலரும், விசாரனை, அரவான் போன்ற படங்கள் நாவல்களை அடிப்டையாகக் கொண்டு எடுக்கப்பட்டு விமர்சனம் ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் வெற்றி பெற்றிருக்கின்றன.
அந்த வரிசையில் ழகரம் திரைப்படத்தின் டிரைலர் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்தின் இயக்குனர் க்ரிஷிடம் ழகரம் உருவானது பற்றி பேசினேன்.

“நான் பிறந்து வளர்ந்தது எல்லாம் நாகர்கோயில். மெக்கானிக்கல் இன்ஜினியர் டிஸ் கண்டின்யூ. சின்ன வயதில் இருந்தே சினிமா மீது எனக்கு ஆர்வம் அதிகம்.

சென்னைக்கு இயக்குனராக வேண்டும் என்று வந்தேன் வந்து 8 ஆண்டுகள் ஆகிறது. முதலில் ஹாக்கி விளையாட்டை மய்யப்படுத்தி ஒரு திரைப்படம் இயக்க முற்பட்ட போது சில காரணங்களால் அதை தொடர முடியாமல் போனது.

டிவி சேனல்களில் வேலை பார்த்துக்கொண்டே சினிமா எடுப்பதற்கு முயற்சி செய்து கொண்டிருந்தேன்.

புத்தக வாசிப்பும் கொஞ்சம் இருந்ததால் நல்ல நாவலை திரைப்படமாக்க வேண்டும் என்று நினைத்தேன். பழங்கால விஷயங்களை சொல்வதற்கு இங்கு நிறைய நாவல்கள் இருக்கிறது.

ஆனால் நாம் எழுத்தாளர்கள் மீது கவனம் செலுத்துவது இல்லை.ஒரு கதை தயார் செய்வதற்கு நாவல்கள் சிறந்த வழி என்று நான் சொல்லுவேன்.

அப்படி நான் தேர்ந்தெடுத்த நாவல்தான் “ப்ரொஜெக்ட் இந்த நாவலின் ஆசிரியரை சந்தித்து உங்கள் நாவலை படமாக எடுக்க போகிறேன் என்று கூறினேன்.

அவரும் மகிழ்ச்சியாக நல்லது எடுங்கள் என்றார் அப்படித்தான் “ழகரம்” உருவானது.

புதையலை தேடி போவதான கதைக்கருவை மய்யமாக வைத்து பல படங்கள் தமிழ் சினிமாவில் வெளியாகி இருக்கிறது.

ஆனால் இந்த படம் சற்று மாறுபட்டு இருக்கும். வரலாற்று ரீதியாக பல்வேறு விஷயங்களை இதில் சொல்லியிருக்கிறேன்.

மக்கள் மத்தியில் இந்த படம் என்னமாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை விட கிடைக்கக்கூடிய பட்ஜெட்டில், இருக்கின்ற இடத்திலே ஒரு சினிமாவை நம்மால் கொடுக்க முடியும் என்பதற்கான விஷயத்தை இயக்குனராக விரும்பும் அடுத்த தலைமுறைகளுக்கு இந்த படம் ஒரு பாடமாக இருக்கும் என்று நான் நம்புகிறேன்.

நடிகர் நந்தா இந்த படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். சந்திர மோகன், விஞ்ணுபரத், இன்னும் பல புது முகங்கள் இந்த படத்தில் நடிக்கிறார்கள்.

இந்த படத்திற்காக விசாகப்பட்டினம் போரா குகை, காஞ்சிபுரம் மாவட்டம், திருவிடந்தை, மகாபலிபுரம் இன்னும் பல வரலாற்று சிறப்பு மிக்க ஊர்களுக்கு சென்று வரலாற்று ரீதியான பல விஷயங்களை தெரிந்து கொண்டு அதைப்போலவே செட் அமைத்து படப்பிடிப்பை தொடங்கினேன். படம் விரு விருப்பாகவும் அடுத்து என்ன நடக்கும் என்கிற எதிர்ப்பார்புடனும் நிச்சயமாக இருக்கும்.

சமகால இளைஞர்களை தமிழின் வரலாற்று சிந்தனைக்கு நிச்சயமாக இப்படம் கொண்டு செல்லும்.

அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் படத்தை வெளியிட திட்டமிட்டிருக்கிறோம்” என்கிறார் அறிமுக இயக்குனர் க்ரிஷ்.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்