விளம்பரம்
முகப்புகோலிவுட்

மாதவனின் "விக்ரம் வேதா" ரகசியம்

  | July 22, 2017 12:23 IST
Celebrities

துனுக்குகள்

  • இரண்டு முன்னணி கதாநாயகர்கள் நடித்து வரும் விக்ரம் வேதா
  • அனைத்து பணிகளும் முடிந்து விரைவில் திரைக்கு வரவிருக்கிறது
  • இப்படத்தில் மாதவன் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார்
நேற்று வெளியான "விக்ரம் வேதா"திரைப்படம் ரசிகர்களுக்கு மிகப்பெரும் விருந்தாக அமைந்துள்ளது. மாதவன் போலீஸ் அதிகாரியாகவும், விஜய் சேதுபதிபதி வடசென்னையை தன் கைக்குள் வைத்திருக்கும் தாதாவாகவும் நடித்துள்ளனர். இவர்களுக்குக்கிடையே நடைபெறும் மோதல் தான் "விக்ரம் வேதா" திரைப்படத்தின் கதை. இப்படத்தினை கணவர் - மனைவியான புஷ்கர் - காயத்ரி இயக்கியுள்ளனர், மாதவனின் ராணுவ பயிற்சி இப்படத்தின் கதாபாத்திரத்திற்கு எந்த விதத்தில் பயன்பட்டது என்பதை இப்படத்தின் இயக்குனர் புஷ்கர் நம்மிடம் பகிர்ந்துகொண்டார்.

மாதவன் - விஜய் சேதுபதி

பல ஆய்வுகளை மேற்கொண்ட பின் தான் இப்படத்தின் கதாபாத்திரங்களை வடிவமைத்திருக்கிறார் இயக்குனர் புஷ்கர். வடசென்னையின் முக்கிய புள்ளியான விஜய்சேதுபதிக்கும், போலீஸ் அதிகாரியான மாதவனுக்குமிடையே நடைபெறும் போராட்டம் தான் இந்த "விக்ரம் வேதா" இந்த இரண்டு மிகப்பெரும் நடிகர்களுக்கு இடையே நடைபெறும் விவாதங்கள், வசனங்கள் முக்கியமானதாகவும், அதே நேரத்தில் பார்க்கும் ரசிகர்களை கவரும் விதமாகவும் இருக்கும். படப்பிடிப்பு தளத்தில் அவர்களுக்கிடையேயான ஒற்றுமையை பலமுறை கவனித்திருக்கிறேன். சரியான நேரத்தில் ஒருவருக்கொருவர் தன்னுடைய நடிப்பினை கச்சிதமாக வெளிப்படுத்தினர் அதனை பார்த்து பலமுறை மூச்சடைத்து போயிருக்கிறேன். இவர்கள் இருவருக்குமிடையேயான காட்சி மிகவும் சுலபமாக, சரியான நேரத்தில் எடுத்து முடிக்கப்பட்டது, இருவரின் பங்களிப்பும் காட்சியில் மிக அதிகமாகவே இருக்கும்.
 
vikram vedha

படப்பிடிப்புக்கு முன் செய்யப்படும் பயிற்சி குறித்து இயக்குனர் புஷ்கர், "இருவருக்கும் தனித்தனியாக பயற்சியினை கொடுப்போம். படப்பிடிப்பு தொடங்குவதற்கு சிறிது நேரத்திற்கு முன் அந்த கதாபாத்திரம் குறித்து விவரிப்பேன். அளவிற்கு அதிகமான பயற்சியின் மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை, அளவிற்கு அதிகமான பயற்சி என்பது அந்த கதாபாத்திரத்தின் இயல்பு தன்மையை அழித்துவிடும். படப்பிடிப்பிற்கு முன் அவர்களுக்கு கொடுக்கும் பயற்சியில் தேவையான உணர்ச்சிகளை பிடித்துக்கொள்வோம்.

மாதவனும், விஜய் சேதுபதியும் ஒரு காட்சியில் ஏன், எதற்காக நடிக்கின்றோம் என்பதில் மிகவும் ஆர்வமாக இருப்பார்கள். ஒரு காட்சியில் நடிப்பதற்கு முன் எதற்காக அந்த காட்சியில் நடிக்கின்றோம், எதற்காக அந்த காட்சி நடைபெறுகின்றது, அந்த காட்சியின் குறிக்கோள் என்ன? என்பதில் இருவரும் மிகவும் தெளிவாக இருப்பார்கள்.

மாதவனின் ராணுவ ரகசியம்
 
vikram vedha

ஆழ்ந்த, துடிப்புடன் கூடிய போலீஸ் அதிகாரியாக மாதவன் இப்படத்தில் நடித்துள்ளார், அந்த காதாபாத்திரமாகவே மாறியுள்ளார் என்று தான் கூறவேண்டும். மாதவனின் கதாபத்திரம் குறித்து இயக்குனர் புஷ்கர் தெரிவிக்கும் பொழுது, "இப்படத்தில் மாதவனுக்கு துப்பாக்கியால் சுடும் காட்சிகள் அதிகம், அவர் துப்பாக்கியை பயன்படுத்தும் விதம் உண்மையான போலீஸ் அதிகாரியை போல் மிகவும் எதார்த்தமாக இருக்கும். உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா? துப்பாக்கியை சுடும்பொழுது அதில் இருந்து வரும் பலத்த சத்தத்தின் காரணமாக கண்கள் மூடிக்கொள்ளும். இயல்பாக இருக்கவேண்டும் என்பதற்க்காக சில பயிற்சிகளை அவர்களுக்கு வழங்கினோம். ஏனென்றால், போலீஸ் அதிகாரிகள் துப்பாக்கியை வைத்து சுடும் பொழுது தங்களது கண்களை மூடமாட்டார்கள்.

துப்பாக்கி சுடும் காட்சிகள் படமாக்கப்பட்டபொழுது, மாதவன் துப்பாக்கியை கையாண்ட விதத்தை பார்த்து நான் பிரமித்துபோனேன் ஏனென்றால் மாதவன் ஒரு சிறந்த போலீஸ் அதிகாரியை போல் துப்பாக்கியை கையாண்டார். இவருடைய அந்த அணுகுமுறைக்கு முக்கிய காரணம் கல்லூரி நாட்களில் அவர் மேற்கொண்டிருந்த ராணுவ பயற்சி தான் அந்த பயிற்சியின் வெளிப்பாடு தான் இந்த கதாபாத்திரத்தை மிகவும் அருமையாக வெளிப்படுத்த உறுதுணையாக இருந்தது".

மாதவன் நடிக்க வருவதற்கு முன்,கல்லூரி நாட்களில் NCC என்ற ராணுவ பயிற்சி பெற்றுவந்தார். மகாராஷ்டிரா மாநிலத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஏழு சிறந்த வீரர்களில் மாதவனும் ஒருவர். அந்த ஏழு நபர்களும் இங்கிலாந்திற்கு அனுப்பிவைக்கப்பட்டு பலவிதமான ராணுவ பயிற்சிகள் அவர்களுக்கு வழங்கப்பட்டது. விமானப்படையில் பணியாற்றுவதற்காக மாதவன் ஒருமுறை தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த பயற்சி தான் இந்த கதாபாத்திரத்தை மிகவும் அருமையாக வெளிப்படுத்த உறுதுணையாக இருந்தது.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்