விளம்பரம்
முகப்புகோலிவுட்

‘மகளிர் மட்டும்’ நல்ல படைப்பு – இயக்குநர் ராஜு முருகன்

  | September 19, 2017 15:40 IST
Magalir Mattum

துனுக்குகள்

  • ‘மகளிர் மட்டும்’ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது
  • இப்படத்தை சூர்யா தனது ‘2டி’ நிறுவனம் மூலம் தயாரித்திருந்தார்
  • இதில் ஜோதிகா ஆவணப்பட இயக்குநராக வலம் வந்தார்
’36 வயதினிலே’ படத்தின் வெற்றிக்கு பிறகு ஜோதிகா நடிப்பில் கடந்த வாரம் வெளியான படம் ‘மகளிர் மட்டும்’. பிரம்மா இயக்கியிருந்த இப்படத்தில் ஜோதிகாவுடன் சரண்யா, பானுப்ரியா, ஊர்வசி, நாசர், லிவிங்க்ஸ்டன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இதில் ஜோதிகா ஆவணப்பட இயக்குநராக வலம் வந்தார்.

ஜிப்ரான் இசையமைத்திருந்த இதற்கு எஸ்.மணிகண்டன் ஒளிப்பதிவு செய்திருந்தார், சி.எஸ்.பிரேம் படத்தொகுப்பாளராக பணியாற்றியிருந்தார். ‘க்ரிஷ் பிக்சர்ஸ்’ நிறுவனத்துடன் இணைந்து நடிகர் சூர்யா தனது ‘2டி எண்டர்டெயின்மெண்ட்’ நிறுவனம் மூலம் தயாரித்திருந்தார். இந்த படம் ரசிகர்களிடையேவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. திரையுலக பிரபலங்களும் படத்தை பாராட்டி சமூக வலைதளங்களில் ஸ்டேட்டஸ் தட்டிய வண்ணமுள்ளனர்

தற்போது, இப்படத்தை பார்த்த ‘ஜோக்கர்’ பட இயக்குநர் ராஜு முருகன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில், “மகளிர் மட்டும் பார்த்தேன். நெடுநாட்களுக்குப் பிறகு கண்ணீரையும் புன்னகையையும் தந்த படம். நமது அம்மாக்களின், சகோதரிகளின், மனைவிகளின், காதலிகளின், தோழிகளின் அகத்தை அற்புதமாய் பேசுகிற படம். ஒவ்வொருவரும் பார்க்க வேண்டிய படைப்பு. தோழன் இயக்குனர் பிரம்மாவுக்கு முத்தங்கள். இப்படியான நல்ல படைப்பைத் தந்த தயாரிப்பாளர் சூர்யா, ராஜ்சேகர் கற்பூர சுந்தரபாண்டியன் அவர்களுக்கும் படத்தில் பங்காற்றிய அத்தனை பேருக்கும் வாழ்த்துக்கள்!” என்று படத்தை வெகுவாக பாராட்டி ஸ்டேட்டஸ் தட்டியுள்ளார்.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்