விளம்பரம்
முகப்புகோலிவுட்

‘தரமணி’ இயக்குநர் ராமின் நெடுநாள் ஆசை

  | August 14, 2017 19:03 IST
Taramani Movie Review

துனுக்குகள்

  • ‘தரமணி’ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது
  • ராம் கதையின் நாயகனாக ‘சவரக்கத்தி’ படத்தில் நடித்துள்ளார்
  • ‘பாலிவுட் பாட்ஷா’வின் தீவிர ரசிகராம் ராம்
‘கற்றது தமிழ், தங்கமீன்கள்’ படங்களின் வெற்றிக்கு பிறகு இயக்குநர் ராமின் இயக்கத்தில் கடந்த வாரம் வெளியான 3-வது படம் ‘தரமணி. இதனைத் தொடர்ந்து இயக்குநராக கைவசம் மம்மூட்டியின் ‘பேரன்பு’ மற்றும் நடிகராக ஜி.ஆர்.ஆதித்யாவின் ‘சவரக்கத்தி’ படம் உள்ளது. இதில் ‘தரமணி’ படத்தில் ஹீரோவாக வசந்த் ரவி என்பவர் நடித்திருந்தார்.

அவருக்கு ஜோடியாக ஆண்ட்ரியா டூயட் பாடி ஆடியிருந்தார். நடிகை அஞ்சலி சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். மிகப் பெரிய எதிர்பார்ப்புடன் வந்த இப்படம் ரசிகர்களிடையேவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில், இயக்குநர் ராம் மீடியாவிற்கு அளித்த ஒரு பேட்டியின்போது சினிமாவில் தனது நெடுநாள் ஆசை பற்றி கூறியுள்ளார்.

பிரபல ஹிந்தி நடிகர் ‘பாலிவுட் பாட்ஷா’ ஷாருக்கானின் தீவிர ரசிகராம் ராம். ஷாருக்கானுக்கென ஒரு கதை ரெடி பண்ணி அவரிடம் சொல்லிவிட்டு, அவருடன் ஒரு செல்ஃபி எடுத்துக்கொள்வதே இயக்குநர் ராமின் நெடுநாள் ஆசையாம்.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்