இதில் ‘கண்ணே கலைமானே’ படத்தில் ஹீரோவாக உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக தமன்னா டூயட் பாடி ஆடியுள்ளார். இப்படத்தை உதயநிதி ஸ்டாலினே தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘ரெட் ஜெயன்ட் மூவீஸ்’ மூலம் தயாரிக்கிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வரும் இதற்கு ஜலேந்தர் ஒளிப்பதிவு செய்துள்ளார், மு.காசி விஸ்வநாதன் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார். இதன் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிவடையும் தருவாயில் உள்ளதாம்.
கண்ணே கலைமானே படம் முழுவதும் பார்த்து முடித்த கணத்தில் என் மனதில் உதயநிதி ஸ்டாலினை மக்கள் அன்பன் என்றே அழைக்கத்தோன்றியது. pic.twitter.com/q04XeB0nAg
— Seenu Ramasamy (@seenuramasamy) March 28, 2018
இந்நிலையில், இயக்குநர் சீனு ராமசாமி தனது ட்வீட்டர் பக்கத்தில் “கண்ணே கலைமானே படம் முழுவதும் பார்த்து முடித்த கணத்தில் என் மனதில் உதயநிதி ஸ்டாலினை ‘மக்கள் அன்பன்’ என்றே அழைக்கத் தோன்றியது” என்று ஸ்டேட்டஸ் தட்டியுள்ளார். ஏற்கெனவே, பிரபல நடிகர் விஜய் சேதுபதிக்கு ‘மக்கள் செல்வன்’ என்ற பட்டத்தை வழங்கியது சீனு ராமசாமி என்பது குறிப்பிடத்தக்கது. வெகு விரைவில் ‘கண்ணே கலைமானே’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீசர் ரிலீஸ் ப்ளான் குறித்த அப்டேட்ஸ் ட்வீட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.