விளம்பரம்
முகப்புகோலிவுட்

வாழ்க்கையின் வெவ்வேறு பரிமாணங்களை உணர்த்தும் செல்வராகவன்

  | March 06, 2017 11:32 IST
Selvaraghavan

துனுக்குகள்

  • உணர்வு போராட்டங்களை கடந்து நம்முடன் பயணிக்கும் உறவு
  • விதி சொல்லும் வழியில் செல்வோம்
  • மனிதருக்குள் மனித குணம் தாண்டிய மிருக குணம் ஒன்று உள்ளது
இயல்பான வாழ்க்கையை சித்தரிப்பில்லாமல் பதிவிடும் இயக்குனர் செல்வராகவனின் வெவ்வேறு கதாபாத்திர பரிமாணங்கள்!

மானுடமறியா மயக்கம்!

"காமம் காமம் என்று உலகத்தார் சிலர் அதை இழித்துப் பேசுகிறார்கள். அது அச்சமூட்டும் பேய், பிசாசு அல்ல. நோயும் இல்லை. அதிமதுரத் தழையைத் தின்ற யானைக்கு மதம் சிறிது சிறிதாகக் கூடுவதுபோல, மனம் விரும்புகிறவரைக் கண்டு அடைந்த பிறகு மனிதர்க்கு ஏற்படும் பரவச நீட்சியாகும் காமம்" என்று நம் தமிழ் இலக்கியங்கள் கூறுகின்றன

காதல் வேறு காமம் வேறு அல்ல, காமத்தின் வழியே தான் ஒரு காதல் பிறக்கும்.

காமத்தை கடந்த காதலை இயல்பாக திரையில் காட்சி படுத்துவதில் என்றுமே நீ தயக்கம் காட்டியதில்லை
பலர் சொல்ல தயங்கும் விஷயங்களை காட்சிப்படுத்துவதில் நீ ஒரு கில்லாடி. உறவுகளை கலாசார ரீதியில் அணுகாமல் உணர்வு ரீதியாக கையாளுவதில் நீ கைதேர்ந்தவன்.
 
selvaraghavan

ஒருவன், ஒருத்தியை பார்க்கும் பொழுது அவள் தனக்கே உரியவள் என்று பார்த்த அடுத்த கணமே தீர்மானிக்கும் பல காட்சிகளை நாம் திரையுலகில் கண்டதுண்டு

ஒருவன், ஒருத்தியை கண்டு, அவளால் அவன் ஈர்க்கப்பட்டு, அந்த ஈர்ப்பு காதலாக மாறுவதற்கும் இடையே பல உணர்வு போராட்டங்கள் உண்டு

நம்முடைய வாழ்க்கையில் ஆயிரம் உறவுகள் நம்மை கடந்து சென்றாலும் ஒரு சில உறவுகள் மட்டுமே நம்முடைய எண்ணங்களையும், இலக்குகளையும் சுமந்து நம்முடன் பயணிக்கும், அந்த உறவு காதலியாகவும் இருக்கலாம், நண்பனாகவும் இருக்கலாம். தன்னுடைய இலக்கை நோக்கி செல்லும் ஒருவனுக்கு, ஒருத்தியின் மீது ஏற்படும் ஈர்ப்பும் உணர்வு போராட்டம் தான்

உணர்வு போராட்டங்களை கடந்து நம்முடன் பயணிக்கும் உறவு, எந்த நிலையிலும் நம்மை விட்டு விலகுவதில்லை.

பேசி, சிரித்து, உடன் உண்டு, படுக்கையை பங்கிட்டாமல் மட்டும் காதலனோ, காதலியோ ஆகிவிடமுடியாது. பார்ப்பதற்கும், காதல் வசப்படுவதற்கும் இடையே பல படிநிலைகள் உண்டு. தனக்கே உரியவனை பார்க்கும் தருணம் சந்தோசமான தருணமாக இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை. மோதலில் உருவான காதல் இங்கு பல உண்டு. அவளுக்கு அவன் மீது ஈர்ப்பு உண்டாகும் பொழுது அவனோ தன் காதலனின் நண்பன்

தன் மீது அவளுக்கு ஈர்ப்பு இருப்பதை அறிந்த அவன் தன் நண்பனின் காதலி என்பதால் விலகி செல்கின்றான். நண்பனின் காதலி என்பதால் விலகுகின்றானே தவிர அவனுக்குள்ளும் அவள் மீது ஈர்ப்பு இருந்தது. அந்த ஈர்ப்பு காதலாக மாறிய தருணம் தன் நண்பனை விட்டு தொலைதூரம் செல்வதை தவிர வேறு வழி அவனுக்கு தெரியவில்லை.

பார்த்தவுடன் ஏற்படும் காதலில் எனக்கு நம்பிக்கை இல்லை, பார்த்தவுடன் ஏற்படுவது காதலே இல்லை, அது ஆணுக்கு பெண்ணின் மீது ஏற்படும் ஈர்ப்பு. அந்த ஈர்ப்பு காதலாகவும் மாறலாம், மாறுவதற்கு வாய்ப்புகள் அதிகமே தவிர காதலாக மாறவேண்டுமென்ற கட்டாயம் இல்லை.

முகம் மாற்றி அலையும் கூட்டம்!

இரவு நேரத்தில் நான் சென்ற சாலையில் ஆட்கள் நடமாட்டம் இல்லை, சாலைகள் எங்கும் சப்தம் இல்லை, எரிச்சலடையவைக்கும் தூசி, புகைகள் இல்லை. நிசப்தம், அமைதியே உருவாகி காட்சி தந்த அந்த சாலை பகலில் அவ்வாறு இல்லை. இரவு நேரத்தில் நான் ஆசையாய் கடந்து வந்த பாதையில் பகலில் என் மனம் செல்லவிரும்பவில்லை. காரணம் சமுதாயம் என்ற மனிதர் கூட்டம் ஏற்படுத்திய மாற்றம்.

இவற்றில் மட்டும் நாம் மாற்றத்தை ஏற்படுத்தவில்லை, தெரிந்தோ தெரியாமலோ எவரோ ஒருவரினுடைய வாழ்க்கையில் நடக்கும் மாற்றத்திற்கும், அவரை யாரென்று அறியாத ஒரு நபர் காரணமாகலாம். ஒவ்வொரு மனிதருக்குள்ளும் ஒரு மிருகமுண்டு, மிருகத்தனமாய் உள்ள மனிதரிடம் இருந்தும் சில சமயங்களில் அன்பு வெளிப்படலாம். இவை அனைத்தும் நம்மை சார்ந்துள்ள சமூகத்தினை பொறுத்தது. சமூகத்தின் தாக்கத்தில் இருந்து தப்பித்தோர் சிலர் இருந்தாலும், சிக்கி சின்னாபின்னமாகியோர் பலரென்றே கூற வேண்டும்.

தமிழ் சினிமாவில் ஹீரோ, வில்லன் என்ற மரபு சினிமா ஆரம்பமான காலகட்டத்திலிருந்தே வழக்கத்தில் இருந்து வருகின்றது. நல்வினைகளை மட்டும் புரிந்து வரும் கதாபாத்திரம் "ஹீரோ" என்றும், அந்த கதாபாத்திரம் செய்யும் வினைகளுக்கு, எதிர் வினை புரியும் கதாபாத்திரம் "வில்லன்" என்றும் அழைக்கப்பட்டுவந்தது. இந்த மரபினை மாற்றி வந்த ஒரு சில படங்களில் நான் குறிப்பிடப்போகும் திரைப்படமும் ஒன்று.
 
selvaraghavan dhanush

ஒவ்வொரு மனிதருக்குள்ளும் மனித குணம் தாண்டிய மிருக குணம் ஒன்று உள்ளது. தன்னை சுற்றி நடக்கும் சம்பவங்களை மையப்படுத்தி அது எப்பொழுது வேண்டுமானாலும் வெளிப்படலாம்.

சிறு வயதில் தன் கண் முன் தகப்பன் தாயினை கொன்ற கோர சம்பவத்தினை கண் எதிரே கண்ட சிறுவன் ஒருவன் வாழ்க்கையை என்ன என்று அறியாமலே விதி செல்லும் வழியில் செல்கின்றான். பசியில் வாடிய பொழுது, பிச்சையெடுக்க ஏந்திய கைகள் தான், தன்னை இந்த சமூகத்தில் நிலைப்படுத்திக்கொள்ள வாளினை ஏந்தி பல உயிர்களை துவம்சம் செய்கின்றது. பசியில் வாடிய உடல் தான் விருப்பமில்லா பெண்ணின் உடலுடன் இணைய எண்ணுகின்றது. தன்னை மீறி, தன்னை எதிர்க்க யாருமில்லை என்று எண்ணிய அடுத்த கணமே. தன்னை எதிர்க்க நினைத்தவர்களையும்,நினைப்பவர்களையும் அளிக்க துடிக்கின்றது. உயிருக்கு பயந்து ஓடிய அவன் தன் குழந்தையை விட்டு சென்ற தருணம், அவனுடைய மிருகவுள்ளம் தந்தையுள்ளமாய் மாற்றம் கண்டது. ஆடிய ஆட்டம் ஒரு நாள் ஓயும், ஓயும் நேரத்தில் எங்கோ மீண்டும் ஆரம்பமாகும்.

பிறந்த நாள் வாழ்த்துக்கள் செல்வராகவன்!

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்