விளம்பரம்
முகப்புகோலிவுட்

'வி' என்ற துவங்குவது எதற்க்காக? - இயக்குநர் சிவா புது விளக்கம்

  | July 18, 2017 18:58 IST
Celebrities

துனுக்குகள்

  • வீரம்,வேதாளம் சூப்பர் டூப்பர் ஹிட்
  • விவேகம் திரைப்படம் இன்னும் சில தினங்களின் சென்சார் செல்கிறது
  • இப்படத்தின் மூன்றாவது பாடலும் வெளியிடப்பட உள்ளது
‘தல’ அஜித் நடிப்பில் வெளியாகி வெற்றிக்கண்ட வீரம், வேதாளம் ஆகிய திரைப்படங்களை தற்போது விவேகம் திரைப்படத்தையும் இயக்கியவர் 'சிறுத்தை' சிவா. இந்த திரைப்படத்தின் அனைத்து வேலைகளும் இறுதிகட்ட பணியில் உள்ள நிலையில் இன்னும் சில நாட்களில் சென்ஸாருக்கு அனுப்பப்பட உள்ள நிலையில் தனியார் செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்த இயக்குநர் சிவாவிடம், தொடர்ந்து நீங்களும் தல அஜித்தும் இணையும் படங்களுக்கு 'வி' என்ற எழுத்தில் தலைப்பு ஆரம்பிக்கின்றன. இதில் எதோ செண்டிமெண்ட் உள்ளதா என்ற கேள்விக்கு சிவா பதில் கூறுகையில் :-

"அஜித் சாரை மனதில் கொண்டு முதலில் படத்தின் கதை தயார் செய்வேன். அதன் பின்பு கதையின் ஒன் லைன் ஸ்டோரியை அவரிடம் தெரிவிப்பேன். அவருக்கு அது பிடித்திருந்தால் அதை திரைக்கதையாக மாற்றி மீண்டும் அவரிடம் கூறுவேன், அதற்க்கு அவர் ஓகே சொன்னால் மட்டுமே படத்துக்கான அடுத்த வேலைகளை துவங்கிவேன்.

கதைக்கு பொருத்தமான பட தலைப்பை எழுதி அஜித் சாரின் கவனத்திற்கு கொண்டு செல்வேன். அதில் கதைக்கு பொருத்தமான ஒன்றை அவர் ஓகே செய்வார். இப்படித்தான் இதுவரை நடந்து வருகிறது.
'வி' எழுத்தில் டைட்டில் வைத்திருப்பது என்பது திட்டமிட்டோ, செண்டிமெண்டோ அல்ல. எதார்த்தமாக அமைந்த ஒன்று தான். ‘ என்றார்.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்