முகப்புகோலிவுட்

சுந்தர்.சி-யின் ‘சங்கமித்ரா’ படம் குறித்த சுவாரஸ்ய தகவல்

  | January 11, 2018 15:05 IST
Sangamithra

துனுக்குகள்

  • ‘கேன்ஸ் ஃபிலிம் ஃபெஸ்டிவல்’-யில் படத்தின் அறிமுக விழா நடைபெற்றது
  • ஜெயம் ரவி, ஆர்யா இணைந்து முக்கிய வேடங்களில் நடிக்கவுள்ளனர்
  • இதன் டைட்டில் கேரக்டரில் தீஷா படானி நடிக்கவுள்ளார்
‘அரண்மனை 2’ படத்திற்கு பிறகு இயக்குநராக சுந்தர்.சி கைவசம் ‘சங்கமித்ரா’ மற்றும் ‘கலகலப்பு 2’ ஆகிய இரண்டு படங்கள் உள்ளது. இதில் ‘கலகலப்பு 2’ படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிவடையும் தருவாயில் உள்ளதாம். இந்நிலையில், இன்று பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேசிய சுந்தர்.சி “அடுத்ததாக ‘சங்கமித்ரா’வின் படப்பிடிப்பை வருகிற ஏப்ரல் அல்லது மே மாதத்தில் துவங்கவுள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்.

8-ஆம் நூற்றாண்டில் உள்ள அழகியான ‘சங்கமித்ரா’ தனது ராஜ்ஜியத்தை காப்பாற்றுவதற்காக எதிர்கொள்ளும் துயரங்களும், சோதனைகளுமே இப்படத்தின் மைய்யக்கருவாம். பல்வேறு ராஜ்ஜியங்கள் மற்றும் உறவுகளைப் பற்றிய இந்தக் கதை படம் பார்க்கும் ரசிகர்களை பிரம்மிப்பூட்டும் விதத்தில் சொல்லப்படவுள்ளதாம். இதன் டைட்டில் கேரக்டரில் ‘M.S.தோனி’ புகழ் தீஷா படானி நடிக்கவுள்ளார். ஜெயம் ரவி, ஆர்யா இணைந்து முக்கிய வேடங்களில் நடிக்கவுள்ளனர். இதனை ‘தேனாண்டாள் ஸ்டுடியோ லிமிடெட்’ நிறுவனம் மெகா பட்ஜெட்டில் தயாரிக்கவுள்ளது.

ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் இரண்டு பாகங்களாக உருவாகவிருக்கும் இதற்கு ‘இசை புயல்’ ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கவுள்ளார், சுபா வசனம் எழுதுகின்றனர், திரு ஒளிப்பதிவு செய்யவுள்ளார். ஏற்கெனவே, படத்தின் ப்ரீ-புரொடக்ஷன் பணிகள் தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடந்து வருகிறதாம். கடந்த ஆண்டு (2017) ‘கேன்ஸ் ஃபிலிம் ஃபெஸ்டிவல்’-யில் படத்தின் அறிமுக விழா நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்