முகப்புகோலிவுட்

துவங்கியது விஜய் – பிரபு தேவா இணையும் படத்தின் ஷூட்டிங்

  | November 02, 2017 15:25 IST
Al Vijay Films

துனுக்குகள்

  • ‘தேவி’ படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது
  • பிரபு தேவாவுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கவுள்ளார்
  • ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு என 2 மொழிகளில் உருவாகுகிறது
ஏ.எல்.விஜய் இயக்கி சமீபத்தில் வெளியான படம் ‘வனமகன்’. இப்படத்தில் ஹீரோவாக ஜெயம் ரவி நடித்திருந்தார். இதனைத் தொடர்ந்து ‘கரு’ என்ற படத்தை ஏ.எல்.விஜய் இயக்கி வந்தார். ஹீரோயினுக்கு முக்கியத்துவமுள்ள இதில் ‘ப்ரேமம்’ புகழ் சாய் பல்லவி நடித்துள்ளார். இதன் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிவடையும் தருவாயில் உள்ளதாம்.

‘கரு’வை அடுத்து ஏ.எல்.விஜய் இயக்கும் புதிய படத்தில் ஹீரோவாக பிரபு தேவா நடிக்கவுள்ளார். ஏற்கெனவே, பிரபு தேவா – ஏ.எல்.விஜய் காம்போவில் வெளியான ‘தேவி’ சூப்பர் ஹிட்டானது குறிப்பிடத்தக்கது. கடந்த செப்டெம்பர் மாதம், இப்படத்தின் பூஜை போடப்பட்டது. ‘கிங் ஆஃப் டான்ஸ்’ பிரபு தேவாவுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் டூயட் பாடி ஆடவுள்ளாராம். முக்கிய வேடத்தில் கருணாகரன் நடிக்கவுள்ளார்.

தற்போது, இந்த படத்தின் ஷூட்டிங் நேற்று (நவம்பர் 1-ஆம் தேதி) முதல் மும்பையில் துவங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்னும் பெயரிடப்படாத இதற்கு சாம்.சி.எஸ் இசையமைக்கவுள்ளார், நிரவ்ஷா ஒளிப்பதிவு செய்யவுள்ளார், ஆண்டனி படத்தொகுப்பாளராக பணியாற்றவுள்ளார். ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு என 2 மொழிகளில் உருவாகும் இதனை ‘டிரைடென்ட் ஆர்ட்ஸ் – பிரமோத் ஃபிலிம்ஸ்’ நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கிறது.
 
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்