முகப்புகோலிவுட்

இயக்குநர் விஷ்ணுவர்தனின் புதிய பட அறிவிப்பு

  | May 04, 2018 12:24 IST
Director Vishnuvardhan

துனுக்குகள்

  • ‘குறும்பு’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் விஷ்ணுவர்தன்
  • இப்படம் கேப்டன் விக்ரம் பத்ராவின் பயோ பிக்காம்
  • இதற்கு சந்தீப் ஸ்ரீவத்சவா கதை எழுதியுள்ளாராம்
‘குறும்பு’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் விஷ்ணுவர்தன். இதனையடுத்து ‘அறிந்தும் அறியாமலும், பட்டியல், பில்லா, சர்வம், ஆரம்பம்’ ஆகிய படங்களை இயக்கினார். இவரது இயக்கத்தில் கடைசியாக வெளியான படம் ‘யட்சன்’. தற்போது, விஷ்ணுவர்தன் இயக்கவிருக்கும் புதிய படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

ஹிந்தியில் உருவாகவுள்ள இப்படம் கார்கில் போரின் போது உயிர் துறந்த கேப்டன் விக்ரம் பத்ராவின் பயோ பிக்காம். இதில் விக்ரம் பத்ராவாக சித்தார்த் மல்ஹோத்ரா நடிக்கவுள்ளார். இதற்கு சந்தீப் ஸ்ரீவத்சவா கதை எழுதியுள்ளாராம்.

இதனை ஷபீர் பாக்ஸ்வாலாவுடன் இணைந்து ‘தர்மா புரொடக்ஷன்ஸ்’ கரன் ஜோஹர் தயாரிக்கவிருக்கிறார். இதை கரன் ஜோஹரே தனது ட்வீட்டர் பக்கத்தில் ஸ்டேட்டஸாகத் தட்டி உறுதிபடுத்தியுள்ளார்.
 
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்