முகப்புகோலிவுட்

சோலோ திரைப்படத்தை கொன்று விடாதீர்கள் - துல்கர் சல்மான் உருக்கமான வேண்டுகோள்

  | October 10, 2017 16:26 IST
Solo Movie

துனுக்குகள்

  • துல்கர் சல்மான் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த படம் ’சோலோ’
  • தமிழ் மற்றும் மலையாளம் என இரண்டு மொழிகளில் இப்படம் வெளியாகியுள்ளது
  • கிளைமாக்ஸ் மாற்றம் இயக்குநரின் அனுமதியில்லாமல் நடைபெற்றுள்ளது
இயக்குநர் பிஜோய் நம்பியார் இயக்கத்தில் நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் 'சோலோ'. தமிழ் மற்றும் மலையாளம் என இரண்டு மொழிகளில் இப்படம் வெளியாகியுள்ளது. சோலோ திரைப்படம் குறித்து கலவையான விமர்சனங்கள் வெளிவந்து கொண்டிருக்கிறது. இப்படம் வெளியான பின் கிளைமேக்ஸ் காட்சிகளும் இயக்குநர் அனுமதி இன்றி மாற்றப்பட்டுள்ளது. 
 
இந்நிலையில் சோலோ திரைப்படம் குறித்து நடிகர் துல்கர் சல்மான் தனது உருக்கமான கருத்தை தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். அதில் " சோலோவை கொன்றுவிடாதீர்கள், கெஞ்சிக் கேட்கிறேன்" எனறு கூறியுள்ளார். மேலும், இதுகுறித்து அவர் கூறியதாவது:-
இயக்குநர் பிஜோய் நம்பியார் தன் மனதில் நினைத்ததை அப்படியே திரைப்படத்தில் காண்பித்துள்ளார்.
 
படம் வெளியான பின்  கிளைமாக்ஸ் மாற்றம் இயக்குநரின் அனுமதியில்லாமல் நடைபெற்றுள்ளது. இனிமேலும் சோலோ படத்தில் எந்த ஒரு மாற்றத்தையும் ஏற்படுத்த வேண்டாம் என்பதை மிக உருக்குத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன் என்றது கூறியுள்ளார்.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்