விளம்பரம்
முகப்புகோலிவுட்

டோரா திரைப்படத்திற்கு வந்த சிக்கல் நீங்கியது

  | March 18, 2017 17:04 IST
Movies

துனுக்குகள்

  • கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களில் நடித்து வருகிறார் நயன்
  • படத்தின் கதை தன்னுடையது என்று ஸ்ரீதர் என்பவர் புகார் செய்தார்
  • எழுத்தாளர் சங்கத்தில் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது
வித்தியாசமான கதை என்றாலோ அல்லது கதநாயகிக்கு மிகவும் முக்கியத்துவம் அளிக்கும் படமாக இருந்தாள் தான் இப்போது நடிகைகள் கேட்கிறார்கள். அப்படி அறிமுகமாகும் இயக்குநர்கள் மிகவும் மாறுபட்ட கதை களத்தை திரை நட்சத்திரங்களிடம் கூறி பின் தான் திரைப்படத்திலும் கமிட்டாகின்றனர். அவ்வாறாக உருவாகி வரும் பல திரைப்படங்கள் வெளியாவதற்கு முன்பெ ஒரு சிலர் அது என்னுடைய கதை, திருடி விட்டார்கள் என இயக்குநர் சங்கத்திடமோ அல்லது எழுத்தாளர் சங்கத்திடமோ புகார் கொடுக்க ஆரம்பிக்கிறார்கள்.

அதேபோல் அண்மையில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் உருவாகி இருக்கும் 'டோரா' திரைப்படம் என்னுடைய 'அலிபாபாவும் அற்புத காரும்' கதை என்று கூறி ஸ்ரீதர் என்பவர் எழுத்தாளர் சங்கத்தில் புகார் ஒன்றினை அளித்திருந்தார். இந்த சூழ்நிலையில் 'டோரா' இயக்குநர் தாஸ் ராமசாமி கதையையும், ஸ்ரீதர் கதையையும் வாங்கி எழுத்தாளர் சங்க நிர்வாகிகள் ஆலோசனை செய்துள்ளனர்.

இதில் இயக்குநர் தாஸ் ராமசாமியின் கதை அவருடைய சொந்த கதை தான் என்று உறுதிபடுத்தியுள்ளனர், எழுத்தாளர் சங்க பிரதிநிதிகள் ஆகையால் படம் வெளியாவதில் எந்த வித மாற்றமும் இல்லை என்று கூறியுள்ளது தயாரிப்பு தரப்பு.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்