விளம்பரம்
முகப்புகோலிவுட்

ஒரே சமயத்தில் எட்டு படத்தில் நடித்த அனுபவம் கிடைத்தது - துல்கர் சல்மான்

  | October 04, 2017 12:07 IST
Director Bejoy Nambiar

துனுக்குகள்

  • தமிழ் மற்றும் மலையாள மொழியில் உருவாகியுள்ளது சோலோ
  • மொத்தம் 11 பேர் இப்படத்திற்கு இசை அமைத்துள்ளனர்
  • துல்கர் சல்மானுக்கு இப்படத்தில் நான்கு வேடங்கள்
இயக்குநர் பிஜாய் நம்பியார் இயக்கத்தில் நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘சோலோ’. தமிழ் மற்றும் மலையாள மொழியில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில், நான்கு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் துல்கர் சல்மான். அவருக்கு ஜோடியாக நடிகை தன்ஷிகா, நடிகை ஸ்ருதி ஹரிஹரன், நடிகை ஆர்த்தி வெங்கடேஷ் மற்றும் நடிகை நேகா ஷர்மா ஆகியோர் நடித்துள்ளனர். மொத்தம் 11 பேர் இப்படத்திற்கு இசை அமைத்துள்ளனர்.

இப்படத்தில் நடித்த அனுபவம் பற்றி சமீபத்தில் பத்திரிக்கையாளர்களிடம் பேசிய துல்கர் சல்மான் கூறியதாவது

“இப்படத்தில் இடம்பெற்றுள்ள நான்கு கதாபாத்திரங்களும் வெவ்வேறு மாதிரியான வேடங்கள் என்பதாலும் எல்லாவற்றுக்கும் தனித்தனி பாவனைகளை பின்பற்ற வேண்டிய நிலை இருந்தது. சிறிய விஷயம் கூட மற்றொரு கதாபாத்திரத்துக்கு வந்துவிடக்கூடாது என்பதிலும் நடக்கும் நடை உட்பட அனைத்தையும் மாற்றி நடித்தேன். ஒரே வேளையில் தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் திரைப்படம் தயாரிக்கப்பட்டதால், சுமார் எட்டு திரைப்படங்களில் நடித்த அனுபவம் எனக்கு கிடைத்தது” என்கிறார்.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்