முகப்புகோலிவுட்

ரசிகர்களுக்கு துல்கர் சல்மான் கொடுத்த காதலர் தின ட்ரீட்

  | February 14, 2018 10:33 IST
Kannum Kannum Kollaiyadithaal First Look Poster

துனுக்குகள்

  • இது துல்கர் சல்மானின் கேரியரில் 25-வது படமாம்
  • இதில் துல்கருக்கு ஜோடியாக ரித்து வர்மா நடிக்கிறார்
  • இன்று காதலர் தின ஸ்பெஷலாக ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளனர்
பீஜாய் நம்பியாரின் ‘சோலோ’ படத்திற்கு பிறகு துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’. தேசிங் பெரியசாமி இயக்கும் இதில் துல்கருக்கு ஜோடியாக ‘பெல்லி சூப்புலு’ புகழ் ரித்து வர்மா டூயட் பாடி ஆடி வருகிறார்.

இது துல்கர் சல்மானின் கேரியரில் 25-வது படமாம். கே.எம்.பாஸ்கரன் ஒளிப்பதிவு செய்து வரும் இதற்கு பிரவீன் ஆண்டனி படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார். ‘FTS ஃபிலிம்ஸ் – ஆண்டோ ஜோசப் ஃபிலிம் கம்பெனி’ நிறுவனங்கள் இணைந்து தயாரித்து வருகிறது. தற்போது, படத்தின் 2-ஆம் கட்ட படப்பிடிப்பு பரபரப்பாக சென்னையில் நடைபெற்று வருகிறது.
 
இந்நிலையில், இன்று (பிப்ரவரி 14-ஆம் தேதி) காதலர் தின ஸ்பெஷலாக படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை துல்கர் சல்மான் டிவிட்டரில் வெளியிட்டுள்ளார். இப்போஸ்டர் ரசிகர்களிடையே செம லைக்ஸ் குவித்து வைரலாகி வருகிறது. அதுமட்டுமின்றி, படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரிக்கச் செய்துள்ளது.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்