முகப்புகோலிவுட்

மணிரத்னம் பட பாடல் வரியை டைட்டிலாக வைத்த துல்கர் சல்மான்

  | November 14, 2017 10:50 IST
Kannum Kannum Kollai Adithaal Movie

துனுக்குகள்

  • இதில் துல்கருக்கு ஜோடியாக ரித்து வர்மா நடிக்கவுள்ளார்
  • ‘திருடா திருடா’ படத்தில் இடம்பெற்ற மெகா ஹிட் பாடலின் தலைப்பு
  • இதற்கு டி.இமான் இசையமைக்கவுள்ளார்
துல்கர் சல்மான் நடித்து சமீபத்தில் தமிழ் மற்றும் மலையாளத்தில் பைலிங்குவலாக வெளியான படம் ‘சோலோ’. இப்படத்தை பீஜாய் நம்பியார் இயக்கியிருந்தார். இதனையடுத்து தேசிங்கு பெரியசாமி இயக்கவுள்ள படத்தில் நடிக்கவுள்ளார் துல்கர் சல்மான். இதில் துல்கருக்கு ஜோடியாக ‘பெல்லி சூப்புலு’ புகழ் ரித்து வர்மா டூயட் பாடி ஆடவுள்ளார்.

தற்போது, இந்த படத்திற்கு ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ என டைட்டில் சூட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது இயக்குநர் மணிரத்னமின் ‘திருடா திருடா’ படத்தில் இடம்பெற்ற மெகா ஹிட் பாடலின் தலைப்பு என்பது குறிப்பிடத்தக்கது. டி.இமான் இசையமைக்கவுள்ள இதற்கு ‘குற்றம் 23’ புகழ் கே.எம்.பாஸ்கரன் ஒளிப்பதிவு செய்யவுள்ளார்.

ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு என 2 மொழிகளில் தயாராகவிருக்கிறதாம். இதன் ஷூட்டிங்கை நாளை (நவம்பர் 15-ஆம் தேதி) முதல் டெல்லியில் துவங்கத் திட்டமிட்டுள்ளனராம். வெகு விரைவில் படத்தில் நடிக்கவுள்ள இதர நடிகர்கள் மற்றும் பணியாற்றவிருக்கும் தொழில்நுட்ப கலைஞர்களின் பட்டியல் டிவிட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்