விளம்பரம்
முகப்புகோலிவுட்

கார்த்திக் சுப்புராஜ் வெளியிட்ட ‘சோலோ’வின் ‘சிவா’ கேரக்டர் டீஸர்

  | September 01, 2017 19:40 IST
Solo Movie Teaser

துனுக்குகள்

  • இப்படம் தமிழ் மற்றும் மலையாளத்திலும் தயாராகி வருகிறது
  • இதன் ‘ருத்ரா’ கேரக்டர் டீஸர் செம லைக்ஸ் குவித்தது
  • இதனை இயக்குநர் பீஜாய் நம்பியாரே தயாரித்து வருகிறார்
மலையாளத்தில் அமல் நீரத்தின் ‘காம்ரேட் இன் அமெரிக்கா (CIA)’ படத்திற்கு பிறகு துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘சோலோ’. ஒரே நேரத்தில் தமிழ், மலையாளம் என இரண்டு மொழிகளில் தயாராகி வரும் இப்படத்தை ‘டேவிட்’ புகழ் பீஜாய் நம்பியார் இயக்கி வருகிறார். துல்கர் சல்மானுடன் நேஹா ஷர்மா, தன்ஷிகா, தீப்தி, ஆர்த்தி, ஸ்ருதி ஹரிஹரன், சதீஷ், நாசர், பார்த்திபன் என பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளதாம். நான்கு கதைகள் கொண்ட இதில் துல்கர் 4 வித்தியாசமான கேரக்டர்களில் நடித்துள்ளார்.

மது நீலகண்டன் – செஜல் ஷா – கிரீஸ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்துள்ள இதற்கு மியூசிக் பேன்ட்களான THAIKKUDAM BRIDGE, MASALA COFFEE, FILTER COFFEE, SEZ ON THE BEAT மற்றும் பிரசாந்த் பிள்ளை,கோவிந்த் மேனன், கெளரவ், ராகினி, அபினவ், சூரஜ் ஆகியோர் இசையமைத்துள்ளனர், ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார். ‘REFEX எண்டர்டெயின்மெண்ட்’ நிறுவனத்துடன் இணைந்து பீஜாய் நம்பியார் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘GETAWAY ஃபிலிம்ஸ்’ மூலம் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறார்.
 

படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிவடையும் தருவாயில் உள்ளதாம். சமீபத்தில், படக்குழுவால் டிவிட்டப்பட்ட க்ளிம்ப்ஸ், 3 பாடல்கள், ‘சிவா’ கேரக்டர் போஸ்டர்ஸ் மற்றும் இயக்குநர் கரன் ஜோகர் வெளியிட்ட ‘ருத்ரா’ கேரக்டர் டீஸர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது, ‘சிவா’ கேரக்டர் டீஸரை இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த டீஸர் ரசிகர்களிடையே செம லைக்ஸ் குவித்து வைரலாகி வருகிறது. அதுமட்டுமின்றி, படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவலையும் உச்சத்திற்கு கொண்டு சென்றுள்ளது.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்