முகப்புகோலிவுட்

அட்வான்ஸாக வரும் துல்கர் சல்மானின் ஹிந்தி படமான ‘கர்வான்’

  | June 01, 2018 13:05 IST
Dulquer Salmaan

துனுக்குகள்

  • துல்கர் சல்மான் ஹிந்தியில் அறிமுகமாகும் முதல் படமாம்
  • இதன் ஃபர்ஸ்ட் லுக் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது
  • முதலில் படத்தை ஆகஸ்ட் 10-ஆம் தேதி ரிலீஸ் செய்யத் திட்டமிட்டிருந்தனர்
‘மகாநடி’ (தமிழில் ‘நடிகையர் திலகம்’) படத்திற்கு பிறகு துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகி வரும் ஹிந்தி படம் ‘கர்வான்’ (KARWAAN). இப்படத்தை அகர்ஷ் ஹூரானா (AKARSH KHURANA) என்பவர் இயக்கி வருகிறார். இது தான் துல்கர் சல்மான் பாலிவுட்டில் என்ட்ரியாகும் முதல் படமாம். ஹீரோயினாக மிதிலா பால்கர் நடிக்கிறார்.

முக்கிய வேடத்தில் இர்ஃபான் கான் நடித்துள்ளாராம். இதனை ‘RSVP மூவீஸ் – ISHKA ஃபிலிம்ஸ்’ நிறுவனங்கள் இணைந்து தயாரித்து வருகிறது. இதன் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் பரபரப்பாக நடைபெறுகிறது. சமீபத்தில், வெளியிடப்பட்ட படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

அதுமட்டுமின்றி, படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரிக்கச் செய்தது. முதலில் படத்தை வருகிற ஆகஸ்ட் 10-ஆம் தேதி ரிலீஸ் செய்யத் திட்டமிட்டிருந்தனர். தற்போது, அட்வான்ஸாக ஆகஸ்ட் 3-ஆம் தேதியே இப்படம் ரிலீஸாகவிருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. வெகு விரைவில் படத்தின் ஆடியோ & டிரெய்லர் ரிலீஸ் ப்ளான் குறித்த அப்டேட்ஸ் ட்வீட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்