முகப்புகோலிவுட்

`பிக் பாஸ் 2' செட்டில் ஏசி மெக்கானிக் மரணம்

  | September 08, 2018 12:03 IST
Bigg Boss Tamil

துனுக்குகள்

  • பிக் பாஸ் சீசன் 2 தற்போது ஒளிபரப்பாகிறது
  • சர்ச்சைகளையும் வரவேற்பையும் ஒரு சேர பெற்ற நிகழ்ச்சி
  • செம்பரம்பாக்கத்தில் உள்ள செட்டில் இது நடந்து வருகிறது
`பிக் பாஸ்' நிகழ்ச்சியின் வரவேற்பைப் பார்த்து அதன் இரண்டாவது சீசன் துவங்கப்பட்டு ஒளிப்பரப்பாகி வருகிறது. முதல் சீசனைப் போல இந்த சீசனையும் கமல் ஹாசனே தொகுத்து வழங்கிவருகிறார்.

`பிக் பாஸ் 2' இல்லத்தின் செட் செம்பரம்பாக்கத்தில் உள்ள ஈவிபி ஃபிலிம் சிட்டியில் அமைக்கப்பட்டுள்ளது. அரியலூர் மாவட்டம், மாத்துரை சேர்ந்த குணசேகரன் இந்த நிகழ்ச்சியில் ஏசி மெக்கானிக்காக பணியாற்றி வந்தார். நிகழ்ச்சி நடக்கும் அரங்கின் இரண்டாவது மாடியில் தங்கியிருந்த அவர், நேற்று இரவு அங்கிருந்து தவறி விழுந்தார்.

உடனே அருகில் இருந்தவர்கள் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்திருக்கின்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி குணசேகரன் இறந்துவிட்டார். இதுபற்றி நசரத்பேட்டை காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்று விசாரணையை மேற்கொண்டுள்ளனர். குணசேகரன் தன் நண்பர்களுடன் சாப்பிட்டுவிட்டு கை கழுவ செல்லும் போது, தவறி கீழே விழுந்ததால் உயிர் இழந்ததாக கூறப்படுகிறது.
 
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்