முகப்புகோலிவுட்

யூ-ட்யூப்பின் முதல் ஒரிஜினல்ஸ் `#ARRivedSeries' ஆரம்பம்

  | November 08, 2018 16:28 IST
A R Rahman

துனுக்குகள்

  • முன்னணி இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மான்
  • இவரின் புதுமுயற்சியை யூ-ட்யூபில் துவங்கியிருக்கிறார்
  • முதல் எப்பிசோட் பதிவேறியிருக்கிறது
தமிழ் மட்டுமல்லாமல் பல மொழிகளிலும் முத்திரை பதித்த இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான். தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே கொண்டவர். இவர் இசையில் பாடிவிட வேண்டும் என ஒவ்வொரு பாடகர்களும் ஏங்கிக் கொண்டிருக்கின்றனர்.

தற்போது அதற்கான வேலைகளைத் யூ-ட்யூபுடன் துவங்கியிருக்கிறார். நெட்ஃப்ளிக்ஸ், அமஸான் போல பல தளங்களில் ஒரிஜினல் சீரிஸ் துவங்கியிருப்பதைப் போல யூ-ட்யூப் தளமும் ஒரிஜினல் சீரிஸ் பலவற்றையும் திட்டமிட்டுள்ளது. அதில் முதலாவதாக ஏ.ஆர்.ரஹ்மான் உடன் இணைந்து `ARRivedSeries'ஐத் துவங்கியிருக்கிறது.

 

பல விண்ணப்பங்கள் பெறப்பட்டு அதிலிருந்து நூறு பாடகர்களைத் தேர்வு செய்து குரல் தேர்வு நடத்தி அதிலிருந்து தேர்வு செய்யப்படுபவர்கள் ஷாரூக் கானின் `ஸீரோ' படத்தில் பாடும் வாய்ப்பைப் பெறுவார்கள். இதன் முதல் எப்பிசோட் ரஹ்மானின் யூ-ட்யூப் அக்கௌண்டில் பதிவேற்றியுள்ளனர்.
 
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்