முகப்புகோலிவுட்

" 'விஸ்வாசம்' அஜித் 'மெர்சல்' விஜய்"- மனம் திறக்கும் எடிட்டர் ரூபன் #Exclusive

  | January 05, 2019 16:30 IST
Editor Ruben

துனுக்குகள்

  • தல,தளபதியின் நம்பிக்கை நாயகன் இவர்
  • அட்லி கொடுத்த வாய்ப்பு இவரின் வாழ்கையை திருப்பி போட்டது
  • விஸ்வாசம் படத்தை இவர்தான் தொகுத்திருக்கிறார்.
தமிழ் சினிமாவில் திரைக்கு முன் நிற்கும் கலைஞர்களை  கொண்டாடும் ரசிகர்கள் திரைக்கு பின்னால் உழைக்கும் கலைஞர்களை பெரிதாக கண்டு கொள்வதில்லை என்பது இந்திய சினிமாவில் எழுதப்படாத விதியாக இருக்கிறது.
 
“மச்சான் இந்த சீன் தலைவரு கலக்கி இருக்காருல, என்னா வசனம், பிச்சிட்டாப்பல” என்று திரையரங்கை விட்டு வெளியேறும் ஒரு ரசிகனின் உணர்வுகளை நம்மால் புரிந்துக்கொள்ள முடிகிறது.
 
சுமார் 5 நிமிட காட்சிக்காக குறைந்த பட்சம் 50 பேராவது உழைக்க வேண்டியிருக்கிறது என்பதை அந்த ரசிகன் அறிந்திருக்க மாட்டான்.

 60 நாள் அல்லது 1 வருடம் என படப்பிடிப்பை முடித்து ஒட்டு மொத்த வீடியோக்களையும் சேர்த்து படத்தொகுப்பாளரிடம் கொடுத்து எது வேண்டும், எது வேண்டாம். எது தேவை, எது தேவையில்லை, இந்த காட்சிகள் நன்றாக இருக்கிறது, இந்த காட்சிகள் மங்களாக இருக்கிறது இதை எடிட் செய்வதில் சிக்கல் ஏற்படும், ஒரு  இடத்தில் காட்சி மாற்றி தொகுக்கப்பட்டாலும் படம் முழுவதும் பாதிக்கும்.
 
எந்த இடத்திலும் மக்களை திசை திருப்பாமல் காட்சிகளை தொகுக்க வேண்டும் என்று 3 மணிநேர சினிமாவிற்கு நீண்ட பல மணிநேரம் தன் கலைத்திறனை செலவழிக்கும் திரைப்பட தொகுப்பாளர் ஒருவரைத்தான் இன்று பார்க்கப் போகிறோம்.
 
“கண்டேன்” திரைப்படம் மூலம் தமிழ்சினிமா உலகிற்குள் காலடி வைத்திருக்கிறார் லிவிங்ஸ்டன் ஆண்டனி ரூபன். இளம் வயது, துடிப்பான வேலை, செய்யும் வேலையில் கூர்மையான கவனம் என தன் ஒட்டுமொத்த உழைப்பையும், திறனையும் தனக்கு கிடைத்த முதல் வேலையிலே ஒட்டுமொத்த சரக்கையும் இறக்கி தனக்கான அடையாளத்தை தமிழ் சினிமா தொகுப்பாளர்கள் மத்தியில் தக்கவைத்துக்கொண்டார்.
 
eb6mq9e

 இதைத்தொடர்ந்து “முற்பொழுதும் உன் கற்பனைகள்” “சமர்” என அடுத்தடுத்த படங்கள் குவிந்து வந்தாலும் ஒரு நல்ல பேனரில் வேலை செய்வதற்கான வாய்ப்பு அவருக்கு எட்டாக்கனியாகவே இருந்திருக்கிறது.
 
8ngscbs

 இந்த நேரத்தில்தான் நடிகர் ஆர்யா, நயன்தாரா நடிப்பில், இயக்குனர் அட்லியின் ராஜா ராணி இவருக்கு ஆப்பிள் மரத்தை வேடிக்கை பார்க்க வந்தவனுக்கு தன் மடியை நோக்கி தானாக விழுந்த ஆப்பிள் போல கிடைத்துள்ளது.
 
em8479fg

 ஒரு பெரிய நிறுவனம், பெரிய வேலை, இது வாழ்கையின் திருப்பு முனையாக இருக்கும் என்றெல்லாம் அப்போது இந்த கலைஞன் நினைத்து பார்த்திருக்க மாட்டான்.
 
ஆனால் அதுதான் நடந்தது. பெரிய படமோ, சின்ன பட்ஜெட் படமோ எதுவாக இருந்தாலும் தன்னுடைய உழைப்பின் மீதும் தன்னை சார்ந்து இயங்கும் சக ஊழியர்களின்  மீதும் வைத்த நம்பிக்கைதான் தமிழ்திரையுலக பிரபலங்களைத் தன்பக்கம் ஈர்க்கவைத்திருக்கிறது.
 
ராஜா ராணிக்கு பிறகு அடுத்தடுத்து தமிழ்சினிமாவில் நட்சத்திரங்களாக இருக்கும் விஜய், அஜித் என பெருந்தலைகளின் படம் இவருக்கு தொடர்ந்து வந்துகொண்டிருக்கிறது. பொங்கலுக்கு வரப்போகும் அஜித்தின் விஸ்வாசம் படத்தையும் இவர்தான் தொகுத்திருக்கிறார்.

 அடுத்தடுத்து 10 படங்களுக்கு மேல் வேலை பிஸியில் இருந்தவரை ஒரு காலைவேலையில் சந்தித்தோம்
 
“வணக்கம் சார் எப்படி இருக்கீங்க” என இன்முகத்தோடு நம்மை வரவேற்றவர் தன்னுடைய திரையுலக அனுபவங்களை பகிர்ந்துக்கொண்டார்.
 
“படிக்கும் போதே இயக்குனர் ஆக வேண்டும் என்றுதான் எனக்கு ஆசை. அதை நோக்கியே என்னுடைய பயணம் தொடர்ந்தது. சினிமாவுக்கான ஏதோ ஒரு கதவை நான் திறக்க வேண்டும் என்று தான் விஷ்யூவல்  கம்யூனிகேஷன் குரூப் எடுத்து படித்தேன்.
 
நான் நினைத்தது போலவே திரைத்துறைக்கான கதவை நான் திறந்து விட்டேன். ஆனால் நான் திறந்தது வீடியோ எடிட்டிங். என்றாலும் எனக்கு கிடைத்திருக்கக்கூடிய இந்த வாய்ப்பை நான் மிகச்சரியாக செய்ய வேண்டும் அப்போதுதான்  இங்குள்ள அனைவருக்கும் என்மீது நம்பிக்கை வரும் என்று முடிவு செய்தேன். அப்படி என்னுடைய வேலையில் நான் காட்டிய அக்கறைதான் என்னை இன்றளவும் இயக்கிக்கொண்டிருக்கிறது.
 
ஆரம்ப காலகட்டத்தில் சிறிய படங்களில் வேலை செய்த போது ஒன்றிரண்டு படங்கள் மட்டுமே வந்துகொண்டிருந்தன. ராஜா ராணி படத்திற்கு பிறகு வாழ்க்கை மாறியது.
 
ராஜா ராணி எடிட்டிர் என்கிற பெயர் கிடைத்தது. அதன் பிறகு அஜித்தின் வேதாளம், விஜயின் தெறி, விவேகம், மெர்சல் இரும்புத்திரை, அறம் என அடுக்கடுக்கான படங்கள் என்னை நம்பி கொடுக்கப்பட்டது.
 
gk2tao38

தல,தளபதி எடிட்டர் என்கிற பெரும் வட்டத்திற்குள் மக்கள் என்னை சிறைபிடித்தனர். இப்போது பொங்கலுக்கு வெளியாகும் “விஸ்வாசம்” நான் தான் எடிட் செய்து கொடுத்திருக்கிறேன்.
 
4tjqe24g

நான் இந்த அளவிற்கு வந்திருக்கிறேன் என்றால் அதற்கு  இயக்குனர் அட்லியும், சிவாவும் முக்கிய காரணம். இந்த தருணத்தில் அவர்களுக்கு நான் நன்றி சொல்லியாக வேண்டும்.
 
அவர்கள் என் மீது வைத்திருந்த நம்பிக்கைதான் எனக்கு உந்து சக்தியாக இருக்கிறது. அதுதான் என்னுடைய வெற்றியாக நான் கருதுகிறேன். இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும்  அடுத்தடுத்து எடுக்கும் படங்களுக்கு என்னை தேர்வு செய்ய தூண்டும் என்மீதான நம்பிக்கைதான்  நான் இந்த துறையில் சம்பாதித்து இருக்கும் சொத்து .
நான் திரையில் கண்டு வியந்த ஒரு மனிதர் ரஜினி சார். அவரோடு பணியாற்றக்கூடிய வாய்ப்பு எனக்கு கிடைக்கவில்லை அதற்கான வாய்ப்பு வரும் என்று நம்புகிறேன்.”என்றவர் இவ்வளவு வேலைகள் இருந்தும் என்னால் இயல்பாக இருக்க முடிகிறது கொடுக்கப்பட்ட வேலைகளை நேர்த்தியாக முடிக்க முடிகிறது என்றால் தன்னோடு பணியாற்றும் சக ஊழியர்களின் பணி மகத்தானது என்பதை நினைவு கூர்ந்தார்.
 
“இன்னும் நான் எத்தனை படங்கள் வேண்டுமானாலும் பண்ணலாம் ஆனால் ஒவ்வொரு முறையும் நான் புதிதாக ஒன்றை கற்றுக்கொண்டுதான் இருக்கிறேன் என்பதை நான் எப்போதும் மறந்ததில்லை.
 
ஒரு படத்தை பார்த்து விட்டு வெளியே வரும் ரசிகன் தனக்கு முழு திருப்தியோடு செல்ல வேண்டும் என்பது மட்டும்தான் என்னுடைய நோக்கம்.

பொங்கல் முடிந்து 10 படங்கள் இருக்கிறது. அதற்கான வேலையில் இருக்கிறேன். என்றாலும் இந்த துறைக்கு நான் கத்துக்குட்டிதான் இன்னும் கற்றுக்கொண்டிருக்கிறேன்.
 
தொடர்ந்து இந்த பணியில் இயங்கினாலும் இயக்குனர் ஆகும் என்னுடைய கனவை நிச்சயமாக நான் நிறைவேற்றுவேன். அதற்கான முயற்சியும் செய்து வருகிறேன்” என நம்பிக்கையோடு தெரிவித்தார்.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்