முகப்புகோலிவுட்

விஸ்வாசம் மோகத்தால் நிகழ்ந்த சோகம்… அஜித்தின் பிரமாண்ட கட்-அவுட் விழுந்ததால் பதற்றம்!

  | January 10, 2019 16:32 IST
Thala Banner

துனுக்குகள்

  • ’பேட்ட’-யுடன் வெளிவந்துள்ளது ‘விஸ்வாசம்’
  • அஜித்-சிவா காம்போவில் வரும் 4வது படம் விஸ்வாசம்
  • அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார்
சிவாவின் இயக்கத்தில் அஜித்திற்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருக்கும் ‘விஸ்வாசம்' படத்திற்கு நேர்மறையான விமர்சனங்கள் குவிந்து கொண்டிருக்கின்றன. சிவா - அஜித் கூட்டணியில் தொடர்ச்சியாக வெளிவரும் 4வது திரைப்படம் இதுவாகும். இதற்கு முன்னர் வீரம், வேதாளம், விவேகம் ஆகிய திரைப்படங்கள் வெளியாகியிருந்தன. இதில் கடைசியாக வெளியான விவேகம் மட்டும் சரியாக போகவில்லை. இதையடுத்து பலரும், ‘இனி சிவா- அஜித் காம்போ படம் வராது' என்று பேச ஆரம்பித்தனர்.

ஆனால், யாரும் எதிர்பாராத விதமாக ‘விஸ்வாசம்' பட அறிவிப்பு வெளியானது. மின்னல் வேகத்தில் படத்தின் ஷூட்டிங் முடிந்து, இன்று வெளியாகியுள்ளது விஸ்வாசம்.

விஸ்வாசம் படம் குறித்து பலர் மகிழ்ச்சியாக கருத்துகள் சொல்லி வரும் நிலையில், திருக்கோவிலூரில் அஜித் ரசிகர்களின் எல்லை மீறிய கொண்டாட்டத்தால் விபரீதம் ஏற்பட்டுள்ளது.
திருக்கோவிலூரில் உள்ள திரையரங்கு ஒன்றுக்கு வெளியே வைக்கப்பட்டிருந்த அஜித்தின் பிரமாண்ட கட்-அவுட்டுக்கு ரசிகர்கள் இன்று காலை பால் அபிஷேகம் செய்தனர். அப்போது, யாரும் எதிர்பாராதவிதமாக கட்-அவுட் சரிந்து கீழே விழுந்தது. இந்த விபத்தில் அஜித்தின் ரசிகர்கள் 6 பேர் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து, அங்கு திரண்டிருந்தவர்கள், காயமடைந்த 6 பேரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இந்த சம்பவத்தால் திரையரங்கு வளாகம் சிறிது நேரம் பதற்றத்துடன் காணப்பட்டது.

இன்று சூப்பர் ஸ்டார் நடிப்பில் ‘பேட்ட' திரைப்படமும் வெளியாகியுள்ளது. சில இடங்களில் விஸ்வாசம் மற்றும் பேட்ட ஒரே திரையரங்க வளாகத்தில் இருக்கும் இரண்டு தியேட்டர்களில் ரிலீஸாகியுள்ளது. இதையொட்டி, சில திரையரங்குகளில் திரண்டிருக்கும் இரு தரப்பு ரசிகர்களும் மோதலில் ஈடுபட்டதாகவும் தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன.


மேலும் படிக்க -‘விஸ்வாசம் படத்தில் நான்..!'- பளுதூக்கம் வீரர்

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்