முகப்புகோலிவுட்

தமிழில் மதம்... இந்தியில் முசல்மானா...? - கமலுக்கு நெட்டிசன்கள் கேள்வி

  | June 12, 2018 17:26 IST
Vishwaroopam 2

துனுக்குகள்

  • கமல்ஹாசன் இயக்கியிருக்கும் படம் `விஸ்வரூபம் 2'
  • இப்படத்தின் டிரெய்லர் நேற்று வெளியானது
  • ஆகஸ்ட் 10ம் தேதி இப்படம் வெளியாகிறது
2013ல் கமல்ஹாசன் இயக்கத்தில் வெளியான படம் `விஸ்வரூபம்'. ராகுல் போஸ், ஆண்ட்ரியா, பூஜா குமார், சேகர் கபூர் எனப் பலரும் நடித்த இப்படத்தின் இரண்டாம் பாகம் ஆகஸ்ட் 10ம் தேதி வெளியாகிறது. இப்படத்தின் டிரெய்லர் நேற்று வெளியானது.

தமிழில் ஸ்ருதிஹாசனும், தெலுங்கில் ஜுனியர் என்.டி.ஆரும், இந்தியில் ஆமிர்கானுமாக படத்தின் மும்மொழி டிரெய்லரும் வெளியானது. இப்போது அதில்தான் சிக்கலே. படத்தின் தமிழ் மற்றும் தெலுங்கு டிரெய்லர்களில் "எந்த மதத்தையும் சார்ந்திருக்கறது பாவமில்ல" என்றும், இந்தி டிரெய்லரில் "முசல்மானாக இருப்பதில் பாவமில்லை" எனவும் வசனங்கள் இடம்பெற்றிருக்கிறது. மொழிக்கு தகுந்தார் போல் வசனத்தை மாற்றியிருப்பது சலசலப்பை உண்டாக்கியிருக்கிறது.

இது குறித்து, நெட்டிசன்கல் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும், `ரெட்டசுழி', `ஆண்தேவதை' போன்ற படங்களை இயக்கிய தாமிரா தனது முகநூல் பக்கத்தில், "இதை கமல் விளக்கினால் நன்றாக இருக்கும்" எனக் கேள்வி எழுப்பியிருக்கிறார். நேற்றைய டிரெய்லர் வெளியீட்டு நிகழ்வின் போது, `விஸ்வரூபம் 2' குறித்து எந்த சிக்கல் வந்தாலும் சந்திக்கத் தயார் என கமல் சொல்லியிருந்தார். தவிர 17ம் தேதி முதல் கமல் தொகுத்து வழங்கும் `பிக்பாஸ் 2' துவங்க இருக்கிறது. சென்ற முறை தன் மீது வைக்கப்பட பல கேள்விகளுக்கும் இந்த மேடையைப் பயன்படுத்தி பதிலளித்தார். எனவே விஸ்வரூபம் 2 டிரெய்லர் கிளப்பியிருக்கும் சர்ச்சைகளுக்கும் பிக்பாஸ் மேடையில் பதில் கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்