முகப்புகோலிவுட்

கமலின் ‘விஸ்வரூபம் 2’ பார்த்த ரசிகர்களின் ட்விட்டர் ரியாக்ஷன்

  | August 10, 2018 12:47 IST
Vishwaroopam 2

துனுக்குகள்

  • முதல் பாகத்துக்கு ரசிகர்களிடையே மிகப் பெரியளவில் வரவேற்பு கிடைத்தது
  • இதன் தொடர்ச்சியாக இன்று 3 மொழிகளில் ரிலீஸாகியுள்ள படம் ‘விஸ்வரூபம் 2’
  • கமல், பூஜா குமார், ஆண்ட்ரியா, ராகுல் போஸ், சேகர் கபூர் நடித்துள்ளனர்
2013-ஆம் ஆண்டு பெரிய போராட்டங்களுக்கு பிறகு ‘உலக நாயகன்’ கமல்ஹாசன் நடித்து, தயாரித்து, இயக்கிய ‘விஸ்வரூபம்’ படம் வெளியாகியது. ஹாலிவுட்டிற்கு நிகரான லெவலில் இருந்த இப்படத்திற்கு விமர்சன ரீதியாகவும், ரசிகர்களிடையேவும் மிகப் பெரியளவில் வரவேற்பு கிடைத்தது.

அதுமட்டுமின்றி, பாக்ஸ் ஆஃபிஸிலும் கலெக்ஷன் கிங்காக வசூல் மழை பொழிய வைத்தது. இதன் தொடர்ச்சியாக இன்று (ஆகஸ்ட் 10-ஆம் தேதி) தமிழ், தெலுங்கு, ஹிந்தி என 3 மொழிகளில் ரிலீஸாகியுள்ள படம் ‘விஸ்வரூபம் 2’. ‘ஆஸ்கர் ஃபிலிம்ஸ்’ நிறுவனத்துடன் இணைந்து கமல்ஹாசன் தனது ‘ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல்’ நிறுவனம் மூலம் தயாரித்துள்ளார்.
 
இதற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இதில் உலக நாயகனுடன், பூஜா குமார், ஆண்ட்ரியா, ராகுல் போஸ், சேகர் கபூர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். 5 வருடங்களுக்கு பிறகு 2-ஆம் பாகம் வந்தாலும், ரசிகர்களுக்கு படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. தமிழ்நாட்டில் மட்டும் பல இடங்களில் படத்தின் காட்சி நேரம் 10 மணிக்கு மேல் என உள்ளது. ஆனால், மற்ற பகுதிகளில் வெளியாகிவிட்ட படத்தை பார்த்த ரசிகர்கள் ட்வீட்டரில் தங்களது கருத்துக்களை ஸ்டேட்டஸாகத் தட்டிய வண்ணமுள்ளனர். படம் பிரம்மதம் என்றும், எதிர்பார்த்த அளவு இல்லை என்றும் கலவையான ரியாக்ஷன்களை ட்விட்டரில் பார்க்க முடிகிறது.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்