முகப்புகோலிவுட்

தமிழ் சினிமாவின் அழகிய காதல் திரைப்படங்கள்

  | July 26, 2017 15:31 IST
Movies

துனுக்குகள்

  • காதல் காட்சிகள் இடம்பெறாத படங்கள் என்பதை விரல் விட்டு எண்ணிவிடலாம்
  • செம ஜாலியான காதலன் கார்த்திக்
  • 'இதயம்' கதாபாத்திரத்துக்கு மிக சரியான நடிகர் முரளி மட்டும் தான்
தமிழ் சினிமா உலகில் காதல் காட்சிகள் இல்லாமல் வந்த திரைப்படங்கள் என்பது மிகவும் குறைவு. காதல் காட்சிகள் இடம்பெறாத படங்கள் என்பதை விரல் விட்டு எண்ணிவிடலாம். ஆனால் காதல் திரைப்படங்கள்? அப்பப்பா, அது கணக்கிடவே முடியாது. அவ்வளவு படங்கள் வெளிவந்தாலும் எல்லோராலும் அதிகம் ரசிக்கப்பட்ட ஐந்து திரைப்படங்களை மட்டும் இங்கு முதல் பதிவாக பதிவு செய்கிறோம்.

வாழ்வே மாயம்:-
 
vazhvey maayam

தன்னுடைய காதலிக்கு தனக்கு இருக்கும் கொடிய நோய் தெரியாமல் இருக்க, அவள் வேறொருவரை திருமணம் செய்ய நினைக்கும் ஒரு உண்மையான காதலனின் படம். உலகநாயகன் கமல்ஹாசன், நடிகை ஸ்ரீதேவி ஆகியோரின் நடிப்பு இப்படத்தில் மெச்சும் படி இருக்கும். இப்படம் ஒரு தெலுகு திரைப்படத்தின் மறு பாதிப்பு என்றாலும் அதை தமிழ் சினிமாவிற்கும், தமிழ் ரசிகர்களுக்கும் ஏற்றார் போல் எடுத்ததை இன்றைக்கும் பாராட்ட வேண்டும். இப்படத்தில் இறுதியாக வரும் வந்தனம் மற்றும் வாழ்வே மாயம்  என தொடங்கும் இரண்டு பாடல்கள் இன்றைக்கும் உண்மையாக காதலிப்பவர்களை கண்கலங்க வைக்கும்.

மௌன ராகம்:-
 
mouna ragam

நவரச நாயகன் கார்த்திக் , நடிகர் மோகன், நடிகை ரேவதி நடிப்பில் உருவாகி வெளிவந்த மிக அற்புதமான திரைப்படம். செம ஜாலியான காதலனாக கார்த்திக்கும், கண்ணியமான கணவனாக நடிகர் மோகனும் திரையில் கலக்கிய திரைப்படம். இப்படி ஒரு காதலி தான் நமக்கு வேண்டும் என்று எதிர்ப்பார்க்கவைக்க கூடிய அளவுக்கு நடிகை ரேவதியின் நடிப்பு பிரமாதம்.இன்றும் இயக்குநர் மணிரத்னத்தின் திரைப்படங்களை ரசிக்க வைப்பதற்கு இப்படத்தின் அஸ்திரமே.
புன்னகை மன்னன்:-
 
punnagai mannan

காதல் மன்னனான உலகநாயகன் கமல்ஹாசனை புன்னகை மன்னனாக மாற்றிய திரைப்படம். தங்களுடைய காதலை பெற்றோர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதற்க்காக தற்கொலை செய்துகொள்ளும் காதலர்களை பற்றி தினசரி செய்திகளை படிக்கும்போதெல்லாம் நமக்கு இந்த படம் நிச்சயம் ஞாபகம் வரும்.

இப்படத்தில் சிறுது நேரமே நடிகை ரேகா வந்தாலும் நம் அனைவரின் மனதிலும் நிங்காத இடம் பிடித்துவிட்டார். இயக்குநர் கே.பாலச்சந்தர் அவர்களின் அற்புதமான காதல் திரைப்படங்களில் இப்படத்திற்கு தனி இடம் உண்டு.

இதயத்தை திருடாதே:-
 
idhayathai thirudathe

இந்த திரைப்படத்தை இன்றும் பார்க்காத இளைஞர்களை காண இயலாது, குறைந்த பட்சம் இப்படத்தை பற்றி கேள்வியாவது பட்டிருப்பார்கள்,இது திரைப்படம் என்று கூறுவதைவிட கத காவியம் என்று கூறலாம், காதலிக்கும் இருவருக்குள்ளேயுமோ அல்லது அவர்களின் பெற்றோர்களிடமோ அல்லது பிறரிடமோ எந்த பிரச்னையும் இல்லை. இது போன்ற படங்களில் பிரச்சனை என்பது அவர்களுக்குள் இருக்கும் நோய். ஆனால் அது போன்ற சோகங்கள் எதுவுமே இன்றி உண்மையான சந்தோஷமே காதல் என்று நிருபித்த திரைப்படம் இது.நடிகர் நாகர்ஜுனா நடித்த திரைப்படங்களில் பலருக்கும் பிடித்த திரைப்படம் இது.

இதயம்:-
 
idhayam

தங்கள் மனதில் உள்ள காதலை தன் காதலியிடம் சொல்ல தயங்கும் இளைஞர்கள் பற்றி கதை, காதலிக்கும் இளைஞர்களிடம் இருக்கும் படபடப்பை அழகாக திரையில் காண்பித்த திரைப்படம். ஆனால் அதுவே அவர்களின் காதலுக்கு பிரச்சனையானால் என்ன செய்விர்கள்?
மறைந்த நடிகர் முரளி நடிப்பு பிரமாதம், இந்த கதாபாத்திரத்துக்கு மிக சரியான நடிகர் முரளி மட்டும் தான்.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்