முகப்புகோலிவுட்

வெங்கட் பிரபுவின் ‘பார்ட்டி’யில் இணைந்த ஜி.வி.பிரகாஷ், அனிருத்

  | July 30, 2018 12:16 IST
Party Movie Single Track

துனுக்குகள்

  • இதனை ‘அம்மா கிரியேஷன்ஸ்’ நிறுவனம் தயாரிக்கிறது
  • ‘ச்சா ச்சா ச்சாரே’ பாடலை சூர்யா – கார்த்தி சேர்ந்து பாடியிருந்தனர்
  • இந்த படத்தில் மிகப் பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடிக்கிறதாம்
‘சென்னை – 28 : செகண்ட் இன்னிங்க்ஸ்’ படத்தின் வெற்றிக்கு பிறகு வெங்கட் பிரபு இயக்கி வரும் படம் ‘பார்ட்டி’ (PARTY). இப்படத்தில் சத்யராஜ், ஜெயராம், நாசர், சம்பத், ஜெய், ‘மிர்ச்சி’ சிவா, ‘கயல்’ சந்திரன், ரம்யா கிருஷ்ணன், ரெஜினா, சஞ்சிதா ஷெட்டி, நிவேதா பெத்துராஜ், ஷாம் என மிகப் பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடிக்கிறதாம்.

வெங்கட் பிரபுவின் சகோதரர் பிரேம்ஜி அமரன் இசையமைக்கும் இதற்கு ராஜேஷ் யாதவ் ஒளிப்பதிவு செய்கிறார், பிரவீன்.கே.எல். படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார். ‘அம்மா கிரியேஷன்ஸ்’ நிறுவனம் சார்பில் டி.சிவா பிரம்மாண்டமாக தயாரிக்கிறார். சமீபத்தில், வெளியிடப்பட்ட படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீசர் மற்றும் நடிகர்கள் சூர்யா – கார்த்தி சேர்ந்து பாடிய ‘ச்சா ச்சா ச்சாரே’ பாடல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

அதுமட்டுமின்றி, படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவலையும் அதிகரிக்கச் செய்தது. தற்போது, படத்தில் இடம்பெறும் ஒரு பாடலை ஜி.வி.பிரகாஷ் குமாரும், இன்னொரு பாடலை அனிருத்தும் பாடியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வெகு விரைவில் ஆடியோ & டிரெய்லர் ரிலீஸ் ப்ளான் குறித்த அப்டேட்ஸ் ட்வீட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்