கடந்த இரண்டு நாட்களாக தமிழ் சினிமா உலகில் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ள ஒரு விஷயமாக இசையமைப்பாளர் இளையராஜா மற்றும் பாடகர் பாலசுப்பிரமணியம் இசை காப்புரிமை விவாதம் மாறிப்போயுள்ளது.
இசையமைப்பாளர் இளையராஜா சார்பில், பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியனுக்கு அனுப்பப்பட்டுள்ள வக்கில் நோட்டீஸ் தான் தற்போது ஒட்டுமொத்த திரை உலகத்தினரரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
இந்த சூழ்நிலையில் இந்த நிகழ்வுக்கு பதில் அளிக்கும் வகையில் இளையராஜாவின் சகோதரர் இயக்குநர் இசையமைப்பாளர் கங்கை அமரன் மிக காட்டமாக தனியார் தொலைகாட்சிகளுக்கு பேட்டியளித்துள்ளமை மேலும் பெரிய அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.
"இளையராஜாவிற்கு என்ன பணப்பற்றாக்குறையா? இவ்வாறு வக்கில் நோட்டீஸ் அனுப்பியுள்ளமை தவறு எனவும் அப்படியென்றால் இளையராஜா இசையமைத்த பாடல்களை அனைத்தும் பெட்டியில் பூட்டி தான் வைக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். இதற்கு முன்பாக அவர் இசையமைத்த பாடல்களுக்கு தயாரிப்பாளர்களிடம் சம்பளம் வாங்கிவிட்டார் என்றும் மக்களின் மனதில் ஒன்றன கலந்த விட்ட பாடல்களை இவரால் எப்படி பாட கூடாது என கூற இயலும்?" எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.