விளம்பரம்
முகப்புகோலிவுட்

உலகநாயகனை ஆதரிக்கும் நடிகை கவுதமி

  | July 26, 2017 14:08 IST
Celebrities

துனுக்குகள்

  • கமலுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பிரிந்தார் நடிகை கவுதமி
  • கமல் கூறியிருப்பது அவருடைய தனிப்பட்ட கருத்து
  • எல்லோருக்கும் கருத்து கூற உரிமை இருக்கிறது
உலகநாயகன் கமல்ஹாசன் சமீபத்தில் நடத்திய பத்திரிக்கையாளர் சந்திப்பில் அனைத்து துறைகளிலும் ஊழல் மலிந்து விட்டதாக ஒரு பரபரப்பு குற்றச்சாட்டினை பகிரங்கமாக பதிவு செய்ய இன்று தமிழகத்தில் உள்ள அனைத்து தொலைக்காட்சிகளிலும் அவர் தான் ஹாட் டாபிக், கமலின் கருத்துக்கு பதில் தருகிறோம் என்ற பெயரில் தமிழக அமைச்சர்கள் கருத்துக்கூற அதற்க்கு கமல் திருப்பி கருத்துக்கூற என கடந்த சில நாட்களாகவே எங்கு பார்த்தாலும் கமல் கமல் என்ற பெயரையே காதுகளில் கேட்கமுடிகிறது. இந்நிலையில் கமலின் இந்த கருத்திற்கு நடிகை கவுதமி ஆதரவு தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:-

"ஒரு குற்றச்சாட்டிற்கு கருத்து கூறும் உரிமை இவ்வுலகத்தில் எல்லோருக்கும் உள்ளது என்று நம்புபவர் நான். தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு துறைகளிலும் ஊழல் நடைபெற்று வருகிறது என்று கமல் கூறியிருப்பது அவருடைய தனிப்பட்ட கருத்து. எந்த ஒரு தனிமனிதனுக்கும் தன்னுடைய கருத்தை தைரியமாக வெளிப்படுத்துவதற்கு இந்த இந்திய நாட்டில் உள்ள உரிமையுண்டு, நாட்டின் நல்ல குடிமகனாக இருக்கும் எல்லோருக்கும் அந்த உரிமை இருக்கிறது. ஆகையால் கமல் கூறிய கருத்தில் தவறு இல்லை என்று கூறியுள்ளார்.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்