முகப்புகோலிவுட்

ஆக்ஷன் அட்வெஞ்சரான ‘இந்திரஜித்’ டிரையிலர்

  | November 10, 2017 19:23 IST
Indrajith Trailer

துனுக்குகள்

  • இதில் கெளதம் கார்த்திக்கு ஜோடியாக டபுள் ஹீரோயின்ஸாம்
  • இதன் டீஸர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது
  • இப்படத்தை பார்த்த சென்சார் குழு ‘யு’ சான்றிதழ் அளித்தது
கெளதம் கார்த்திக் நடித்து பல மாதங்களாக ரிலீஸுக்கு வெயிட்டிங் லிஸ்டில் உள்ள படம் ‘இந்திரஜித்’. கலா பிரபு இயக்கியுள்ள இதில் சோனாரிகா படோரியா, ‘உதயம் NH4’ அஷ்ரிதா ஷெட்டி என டபுள் ஹீரோயின்ஸாம். மேலும், சுதன்சு பாண்டே, பிரதாப் போத்தன், ராஜ்வீர் சிங், சச்சின் கடேகர் ஆகியோர் மிக முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

கே.பி. இசையமைத்துள்ள இதற்கு ராஜாமணி ஒளிப்பதிவு செய்துள்ளார், வி.டி.விஜயன் – எஸ்.ஆர்.கணேஷ் பாபு இருவரும் இணைந்து எடிட்டிங் செய்துள்ளனர். இதனை ‘வி கிரியேஷன்ஸ்’ நிறுவனம் சார்பில் கலைப்புலி.எஸ்.தாணு பிரம்மாண்டமாக தயாரித்துள்ளார். சமீபத்தில், படக்குழுவால் டிவிட்டப்பட்ட இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்ஸ், டீஸர் மற்றும் 6 பாடல்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.
 

ஏற்கெனவே, படத்தை பார்த்த சென்சார் குழுவினரும் கிளீன் ‘யு’ சான்றிதழ் அளித்துள்ளனராம். தற்போது, படத்தின் டிரையிலரை வெளியிட்டுள்ளனர். இந்த டிரையிலர் ரசிகர்களிடையே செம லைக்ஸ் குவித்து வைரலாகி வருகிறது. அதுமட்டுமின்றி, படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரிக்கச் செய்துள்ளது. ஆக்ஷன் அட்வெஞ்சராக உருவாகியுள்ள இப்படத்தை வருகிற நவம்பர் 24-ஆம் தேதி ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர்.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்