விளம்பரம்
முகப்புகோலிவுட்

மீண்டும் கைகோர்க்கும் ‘என்னை அறிந்தால்’ கூட்டணி

  | September 12, 2017 14:53 IST
Arun Vijay Next Film

துனுக்குகள்

  • அருண் விஜய் கைவசம் 3 படங்கள் உள்ளது
  • இப்படம் அருண் விஜய்யின் கேரியரில் 25-வது படமாம்
  • ‘என்னை அறிந்தால்’ படத்தில் அருண் விஜய் வில்லனாக மிரட்டியிருந்தார்
அறிவழகனின் 'குற்றம் 23’ படத்தின் வெற்றிக்கு பிறகு அருண் விஜய் நடித்து நீண்ட நாட்களாக ரிலீஸுக்கு வெயிட்டிங் லிஸ்டில் உள்ள படம் ரத்ன சிவாவின் ‘வா டீல்’. இதனைத் தொடர்ந்து அருண் விஜய் ஹீரோவாக மகிழ் திருமேனியின் ‘தடம்’ படத்திலும், முக்கிய வேடத்தில் பிரபாஸின் ‘சாஹோ’ படத்திலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில், அருண் விஜய் மற்றுமொரு புதிய படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார். இதனை இயக்குநர் கெளதம் மேனன் இயக்கவுள்ளதாக கோலிவுட்டில் தண்டோரா போடப்படுகிறது. ஏற்கெனவே, கெளதம் மேனன் – அஜித் காம்போவில் வெளியான ‘என்னை அறிந்தால்’ படத்தில் அருண் விஜய் வில்லனாக மிரட்டியிருந்தார்.

இன்னும் பெயரிடப்படாத இப்படம் அருண் விஜய்யின் கேரியரில் 25-வது படமாம். வெகு விரைவில் இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது, கெளதம் மேனன் இயக்கத்தில் விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’ மற்றும் தனுஷின் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ ஆகிய 2 படங்கள் தயாராகி வருவது குறிப்பிடத்தக்கது.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்