முகப்புகோலிவுட்

VTV மேஜிக்கை மீண்டும் தொடரும் கௌதம் மேனன்

  | February 08, 2018 13:15 IST
Gautham Menon

துனுக்குகள்

  • ‘மின்னலே’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் கெளதம் மேனன்
  • GVM கைவசம் ‘துருவ நட்சத்திரம்’ & ‘ENPT’ ஆகிய 2 படங்கள் உள்ளது
  • இப்படத்தில் 4 முன்னணி நடிகர்கள் நடிக்கவுள்ளனர்
கோலிவுட்டில் 2001-ஆம் ஆண்டு வெளியான ‘மின்னலே’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் கெளதம் வாசுதேவ் மேனன். இதனையடுத்து ‘காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, வாரணம் ஆயிரம், விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா’ போன்ற வெற்றிப் படங்களை இயக்கினார் கெளதம் மேனன்.

தற்போது, கெளதம் மேனன் கைவசம் விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’ மற்றும் தனுஷின் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ ஆகிய 2 படங்கள் உள்ளது. இவ்விரண்டு படங்களின் ஷூட்டிங்கும் இறுதிக்கட்டத்தில் இருக்கிறது. இந்நிலையில், கெளதம் மேனன் இயக்கவிருக்கும் புதிய படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

‘ஒன்றாக’ என இதற்கு டைட்டில் சூட்டப்பட்டுள்ளது. ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ படத்தில் சிம்பு நடித்த கார்த்திக் கேரக்டர், 8 வருடங்கள் கழித்து இப்போ என்ன செய்கிறார்? என்பது தான் இந்த படத்தின் ஒன் லைனாம். கார்த்திக் கதாபாத்திரத்துடன் மூன்று நண்பர்களும் கதையில் டிராவல் ஆவார்களாம். படத்தின் நான்கு முதன்மை கதாபாத்திரங்களிலும் 4 முன்னணி நடிகர்கள் நடிக்கவுள்ளனர். வெகு விரைவில் இப்படம் பற்றிய இதர விவரங்கள் டிவிட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்