முகப்புகோலிவுட்

எக்ஸ்பெக்டேஷன் லெவலை கூட்டிய ‘கஜினிகாந்த்’ டீஸர்

  | January 11, 2018 17:02 IST
Ghajinikanth Movie Teaser

துனுக்குகள்

  • ஆர்யாவுக்கு ஜோடியாக ‘வனமகன்’ புகழ் சாயீஷா நடிக்கிறார்
  • இது ‘பலே பலே மகாடிவோய்’ படத்தின் ரீமேக் என கூறப்படுகிறது
  • இதன் போஸ்டர்ஸ் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது
கெளதம் கார்த்திக்கின் ‘ஹரஹர மஹாதேவகி’ படத்திற்கு பிறகு இயக்குநர் சந்தோஷ்.பி.ஜெயக்குமார் கைவசம் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ மற்றும் ‘கஜினிகாந்த்’ ஆகிய 2 படங்கள் உள்ளது. இதில் ‘கஜினிகாந்த்’ படத்தில் ஹீரோவாக ஆர்யா நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக ‘வனமகன்’ புகழ் சாயீஷா டூயட் பாடி ஆடி வருகிறார். மேலும், முக்கிய வேடங்களில் சதீஷ், கருணாகரன் நடிக்கின்றனர்.

பால முரளி பாலு இசையமைக்கும் இதற்கு பல்லு ஒளிப்பதிவு செய்கிறார், ஜி.கே.பிரசன்னா படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார். ‘ஸ்டுடியோ கிரீன்’ நிறுவனம் சார்பில் கே.ஈ.ஞானவேல்ராஜா தயாரிக்கிறார். இப்படம் தெலுங்கில் நானி நடிப்பில் ரிலீஸாகி மெகா ஹிட்டான ‘பலே பலே மகாடிவோய்’ படத்தின் ரீமேக் என கூறப்படுகிறது.
 

இதன் ஷூட்டிங் பரபரப்பாக நடைபெற்று வருகிறதாம். சமீபத்தில், நடிகர் சூர்யா டிவிட்டிய ஃபர்ஸ்ட் லுக் மற்றும் நடிகைகள் த்ரிஷா – ஹன்ஷிகா இணைந்து வெளியிட்ட செகண்ட் லுக் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது, படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீஸரை வெளியிட்டுள்ளனர். இந்த டீஸர் ரசிகர்களிடையே செம லைக்ஸ் குவித்து வைரலாகி வருகிறது. அதுமட்டுமின்றி, படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவலையும் அதிகரிக்கச் செய்துள்ளது.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்