முகப்புகோலிவுட்

ஹன்சிகாவின் த்ரில்லர் படத்துக்காக கமிட்டான பிரபல இசையமைப்பாளர்

  | July 10, 2018 12:14 IST
Hansika Motwani Movies

துனுக்குகள்

  • ஹன்சிகா கைவசம் மூன்று படங்கள் உள்ளது
  • லக்ஷ்மனிடம் உதவி இயக்குநராக பணியாற்றி சினிமா கற்றவர் ஜமீல்
  • இந்த படம் க்ரைம் த்ரில்லர் ஜானரில் உருவாகவிருக்கிறது
பிரபு தேவாவின் ‘குலேபகாவலி’ படத்திற்கு பிறகு நடிகை ஹன்சிகா கைவசம் விக்ரம் பிரபுவின் ‘துப்பாக்கி முனை’, அதர்வாவின் ‘100’, UR.ஜமீல் படம் என 3 படங்கள் உள்ளது. இதில் அறிமுக இயக்குநர் UR. ஜமீல் இயக்கவுள்ள படம் க்ரைம் த்ரில்லர் ஜானரில் உருவாகவிருக்கிறது. இவர் இயக்குநர் லக்ஷ்மனிடம் ‘ரோமியோ ஜூலியட், போகன்’ ஆகிய படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றி சினிமா கற்றவராம்.

ஹீரோயினுக்கு முக்கியத்துவமுள்ள இந்த படத்தை ‘ஜியோஸ்டார் எண்டர்ப்ரைசஸ்’ நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இதன் ப்ரீ-புரொடக்ஷன் பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. ஷூட்டிங்கை வருகிற ஆகஸ்ட் மாதம் துவங்கத் திட்டமிட்டுள்ளனர். படப்பிடிப்பை சென்னை, ஐரோப்பா மற்றும் மொரிஷியஸ் ஆகிய இடங்களில் நடத்தவுள்ளனர்.

தற்போது, இப்படத்திற்கு இசையமைக்க ஜிப்ரான் கமிட்டாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வெகு விரைவில் படத்தில் நடிக்கவுள்ள இதர நடிகர்கள் மற்றும் பணியாற்றவிருக்கும் தொழில்நுட்ப கலைஞர்களின் பட்டியல் ட்வீட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்