முகப்புகோலிவுட்

'கோலி சோடா 2' டிரெய்லரை வெளியிட்ட விஜய் சேதுபதி

  | February 14, 2018 18:02 IST
Goli Soda 2

துனுக்குகள்

  • ‘கோலி சோடா’ முதல் பாகம் சூப்பர் ஹிட்டானது
  • சமுத்திரக்கனி நெகட்டிவ் ஷேடிலும், கெளதம் மேனன் போலீஸாகவும் நடித்துள்ளனர்
  • இதன் டிரையிலரை இன்று விஜய் சேதுபதி வெளியிட்டுள்ளார்
‘காதல், தீபாவளி, வழக்கு எண் : 18/9’ போன்ற பல வெற்றிப் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர் SD.விஜய் மில்டன். இவர் ‘அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது, கோலி சோடா, 10 எண்றதுக்குள்ள’ ஆகிய படங்களை இயக்கியுள்ளார். கடைசியாக விஜய் மில்டன் இயக்கத்தில் வெளியான படம் ‘கடுகு’. தற்போது, 2014-ஆம் ஆண்டு இவரது இயக்கத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டான ‘கோலி சோடா’ படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி வருகிறார்.

புதுமுக நடிகர்கள் நடிக்கும் இந்த படத்திற்கு விஜய் மில்டனே ஒளிப்பதிவு செய்து தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘ரஃப் நோட் புரொடக்ஷன்’ மூலம் தயாரிக்கிறார். இதில் இயக்குநர் சமுத்திரக்கனி நெகட்டிவ் ஷேடிலும், இயக்குநர் கெளதம் மேனன் போலீஸாகவும் நடித்துள்ளனர். அச்சு இசையமைத்து வரும் இதற்கு தீபக் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார்.
 

சமீபத்தில், வெளியிடப்பட்ட ஆடியோ டீஸர் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இதன் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிவடையும் தருவாயில் உள்ளதாம். இந்நிலையில், படத்தின் டிரையிலரை 'மக்கள் செல்வன்' நடிகர் விஜய் சேதுபதி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த டிரையிலர் ரசிகர்களிடையே செம லைக்ஸ் குவித்து வருவதோடு, படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரிக்கச் செய்துள்ளது.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்