விளம்பரம்
முகப்புகோலிவுட்

படக்குழு நன்றாக அமைந்தால் மட்டுமே முன்னணி ஹீரோ பட்டம் நிலைத்திருக்கும் – நடிகர் ஜெயம் ரவி

  | March 18, 2017 11:18 IST
Celebrities

துனுக்குகள்

  • சில இயக்குநர்கள் நன்றாக கதை சொல்வார்கள் அதை காட்சிபடுத்த முடியாது
  • தொழில் நுட்ப கலைஞர்கள் தவறு செய்தால் ஒட்டுமொத்த உழைப்பும் வீண்
  • நாங்கள் கதாநாயகர்களாக தொடர அனைவரின் ஒத்துழைப்பும் தேவை
நடிகர் ஜெயம் ரவி இப்போது பல திரைப்படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். கதாநாயகர்கள் தங்களுடைய முழு திறமையை மக்களின் முன் காட்டி வரவேற்பை பெற என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து கூறியுள்ளார் நடிகர் ஜெயம்ரவி.

“சில இயக்குநர்கள் மிகவும் நன்றாக கதை சொல்லுவார்கள், ஆனால் அவர்கள் சொன்னதுபோல படக் காட்சிகளை எடுக்க முடியாது. அதற்கு பல காரணங்கள் இருந்தாளும், மிக முக்கியமான காரணமாக பார்க்கப்படுவது படக்குழு நன்றாக அமையாதது, அதிலும் தொழில் நுட்ப கலைஞர்கள் சரியாக அமையவில்லை என்றால், குறிப்பிட்ட அந்த திரைப்படம் சரியாக வராது. அந்த படத்திற்காக உழைத்த அனைவருக்கும் பலன் கிடைக்காமல் போவது மட்டுமின்றி குறிப்பாக இயக்குநரையும், கதாநாயகரகளின் எதிர்காலத்தையும் பாதிக்கும்.

ஆகவே, நான் எந்த மாதிரியான கதையை கேட்டு ஒப்புக் கொண்டாலும், அப்படத்தின் படக்குழு யார் இருக்கிறார்கள் என்பதை மிகவும் கவனிப்பேன். அந்த பகுதியில் எனக்கு திருப்தியாக இருந்தால் மட்டுமே அந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொள்வேன், இல்லையென்றால் அவர்களிடம் நல்ல முறையில் கூறி தவிர்த்து கொள்வேன். ஏனென்றால் ஒரு கதாநாயகனாக நான் என்னுடைய முழு திறமையை காட்ட வேண்டும் என்றால், நல்ல கதையுடன் நன்றாக பணியுரியும் படக்குழுவும் நிச்சயம் வேண்டும்.
தொழில் நுட்ப குழுவில் ஈடுபடும் அனைவரும் அவரவர் வேலையை சரியாக செய்தால் தான் கதாநாயகனின் திறமையும் உழைப்பும் முழுவதுமாக திரையில் வெளிப்படும். இல்லையெனில் எவ்வளவு கடினமாக நாங்கள் உழைத்தாலும் எல்லாமே வீணாகிவிடும்” என்று கூறியுள்ளார்.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்