முகப்புகோலிவுட்

மணிரத்னம் படத்தில் ஒப்பந்தமான ‘96’ இசையமைப்பாளர்

  | November 08, 2018 12:24 IST
Govind Vasantha

துனுக்குகள்

  • மணிரத்னம் தயாரிக்கும் புதிய படத்தை தனசேகரன் இயக்கவுள்ளார்
  • இந்த படத்துக்கு தனசேகரனுடன் இணைந்து மணிரத்னமும் ஸ்க்ரிப்ட் எழுதியுள்ளார்
  • இப்படத்திற்கு ‘96’ புகழ் கோவிந்த் வஸந்தா இசையமைக்கவுள்ளார்
கார்த்தியின் ‘காற்று வெளியிடை' படத்திற்கு பிறகு இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் இந்த ஆண்டு (2018) செப்டம்பர் மாதம் வெளியான படம் ‘செக்கச்சிவந்த வானம்'. இதில் சிம்பு, விஜய் சேதுபதி, அரவிந்த் சாமி, அருண் விஜய், பிரகாஷ் ராஜ்,ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ், அதிதி ராவ், டயானா, தியாகராஜன், ஜெயசுதா என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது.

இந்த படம் விமர்சன ரீதியாகவும், ரசிகர்களிடையேவும் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது, மணிரத்னமின் புதிய படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இன்னும் பெயரிடப்படாத இப்படத்தை தனசேகரன் என்பவர் இயக்கவுள்ளாராம்.

இதனை மணிரத்னமே தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘மெட்ராஸ் டாக்கீஸ்' மூலம் தயாரிக்கவுள்ளார். அதுமட்டுமின்றி, தனசேகரனுடன் இணைந்து மணிரத்னமும் ஸ்க்ரிப்ட் எழுதியுள்ளாராம். இதற்கு ‘96' புகழ் கோவிந்த் வஸந்தா இசையமைக்கவுள்ளார். வெகு விரைவில் இப்படம் குறித்த இதர அறிவிப்புகள் வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகிறது.
 
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்