முகப்புகோலிவுட்

கிங் ஆஃப் டான்ஸின் ‘குலேபகாவலி’ புதிய டிரையிலர்

  | January 10, 2018 17:23 IST
Gulaebaghavali  Release Date

துனுக்குகள்

  • பிரபு தேவாவுக்கு ஜோடியாக ஹன்ஷிகா டூயட் பாடி ஆடியுள்ளார்
  • இதன் பாடல்கள் & டிரையிலர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது
  • இப்படத்தை வருகிற பொங்கல் ஸ்பெஷலாக வெளியிடவுள்ளனர்
ஏ.எல்.விஜய்யின் ‘தேவி’ படத்தின் வெற்றிக்கு பிறகு பிரபு தேவா ஹீரோவாக நடித்துள்ள படம் ‘குலேபகாவலி’. கல்யாண் இயக்கியுள்ள இப்படத்தில் ‘கிங் ஆஃப் டான்ஸ்’ பிரபு தேவாவுக்கு ஜோடியாக ஹன்ஷிகா டூயட் பாடி ஆடியுள்ளார். மேலும், ரேவதி, ராம்தாஸ்,ஆனந்தராஜ், யோகி பாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

விவேக் – மெர்வின் இணைந்து இசையமைத்துள்ள இதற்கு ஆனந்த குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார், விஜய் வேலுக்குட்டி படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார். ‘KJR ஸ்டுடியோஸ்’ நிறுவனம் சார்பில் கோட்டப்பாடி.ஜே.ராஜேஷ் தயாரித்துள்ளார். சமீபத்தில், வெளியிடப்பட்ட பாடல்கள் மற்றும் டிரையிலர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.
 

படத்தை பார்த்த சென்சார் குழுவினரும் கிளீன் ‘யு’சான்றிதழ் அளித்துள்ளனராம். தற்போது, படத்தின் புதிய டிரையிலரை வெளியிட்டுள்ளனர். இந்த டிரையிலர் ரசிகர்களிடையே செம லைக்ஸ் குவித்து வைரலாகி வருகிறது. அதுமட்டுமின்றி, படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரிக்கச் செய்துள்ளது. படத்தை வருகிற பொங்கல் ஸ்பெஷலாக ஜனவரி 12-ஆம் தேதி ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர்.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்