முகப்புகோலிவுட்

குரு சோமசுந்தரத்தின் ‘ஓடு ராஜா ஓடு’ டிரெய்லர்

  | August 06, 2018 11:03 IST
Guru Somasundaram

துனுக்குகள்

  • குரு சோமசுந்தரம் நடிப்பில் உருவாகியுள்ள புதிய படம் ‘ஓடு ராஜா ஓடு’
  • நிஷாந்த் மற்றும் ஜத்தின் இணைந்து இப்படத்தை இயக்கியுள்ளனர்
  • படத்தை ஆகஸ்ட் 17-ஆம் தேதி ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர்

‘ஜோக்கர்’ புகழ் குரு சோமசுந்தரம் நடிப்பில் உருவாகியுள்ள புதிய படம் ‘ஓடு ராஜா ஓடு’. மேலும், முக்கிய வேடங்களில் நாசர், ஆனந்த் சாமி, லக்ஷ்மி பிரியா, ஆஷிகா சால்வன் ஆகியோர் நடித்துள்ளனர். நிஷாந்த் மற்றும் ஜத்தின் இணைந்து இப்படத்தை இயக்கியுள்ளனர். 

 

தோஷ் நந்தா இதற்கு இசையமைத்துள்ளார். இயக்குநர் நிஷாந்த் திரைக்கதை எழுதியதோடு, படத்தொகுப்பும் செய்துள்ளார். சுனில் என்பவருடன் இணைந்து இயக்குநர் ஜத்தினும் ஒளிப்பதிவு செய்துள்ளார். இதனை ‘விஜய் மூலன் டாக்கீஸ்’ நிறுவனம் சார்பில் விஜய் மூலன் தயாரித்துள்ளார்.

 

 

ஏற்கெனவே, வெளியிடப்பட்ட ஃபர்ஸ்ட் லுக் மற்றும் ப்ரோமோ பாடல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது, படத்தின் டிரெய்லரை வெளியிட்டுள்ளனர். இந்த டிரெய்லர் ரசிகர்களிடையே செம லைக்ஸ் குவித்து வைரலாகி வருகிறது. படத்தை வருகிற ஆகஸ்ட் 17-ஆம் தேதி ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர். இதே நாளில், நயன்தாராவின் ‘கோலமாவு கோகிலா’வும் ரிலீஸாகவிருப்பது குறிப்பிடத்தக்கது.    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்