விளம்பரம்
முகப்புகோலிவுட்

மெர்சல் மூலம் மீண்டும் இணைந்த தெறி கூட்டணி

  | August 19, 2017 14:20 IST
Mersal Songs

துனுக்குகள்

  • நாளை மெர்சல் படத்தின் இசை வெளியீட்டு விழா
  • அட்லீயின் முதல் படமான 'ராஜா ராணி' படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசை
  • விஜய், அட்லீ, ஜி.வி.பிரகாஷ் கூட்டணி தெறி படத்தில் மாபெரும் வெற்றி பெற்றது
'தெறி' இயக்குநர் அட்லீ இயக்கத்தில் 'தளபதி' விஜய் நடிப்பில் உருவாகியுள்ள 'மெர்சல்' திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள முதல் பாடலான "ஆளப்போறான் தமிழன்" பாடல் சில நாட்களுக்கு முன் இணையத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அதன் தொடர்ச்சியாக ஆஸ்கர் நாயகன் இசை புயல் ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் பிரபல பாடகி ஸ்ரேயா கோஷல் இணைந்து பாடிய நீதானே.. என்ற பாடலும் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா மாதம் 20ம் தேதி (நாளை) சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் மிக பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. இதனிடையே, 'மெர்சல்' திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள மூன்றாவது பாடல் இன்று வெளியாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 'அரசன்' என்று துவங்கும் இந்தப்பாடலை 'தளபதி' விஜய்க்காக இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பிரபல இசையமைப்பாளரும் நடிகரும் ஏ.ஆர்.ரஹ்மானின் மருமகனுமாகிய ஜி.வி.பிரகாஷ்குமார் பாடியுள்ளது தான் இதனின் தனி சிறப்பே. இந்தப்பாடலை பிரபல பாடலாசிரியர் விவேக் எழுதியுள்ளார்.

இயக்குநர் அட்லீயின் முதல் திரைப்படமான 'ராஜா ராணி' மற்றும் 'தெறி' ஆகிய படங்களுக்கு ஜி.வி. தான் இசை, அப்படங்களில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் மக்களிடம் நல்ல வரவேற்பு பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்