விளம்பரம்
முகப்புகோலிவுட்

விர்ஜின் பசங்கத் தலைவருக்கு ஜோடியான ஷாலினி

  | September 12, 2017 13:53 IST
100 % Love Tamil Remake

துனுக்குகள்

  • நடிகராக ஜி.வி.பிரகாஷ் குமார் கைவசம் 11 படங்கள் உள்ளது
  • டோலிவுட்டில் ‘100% லவ்’ மெகா ஹிட்டானது
  • முதலில் ஹீரோயினாக நடிக்க லாவண்யா கமிட்டாகியிருந்தார்
'புரூஸ் லீ' படத்திற்கு பிறகு இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் ஹீரோவாக சண்முகம் முத்துசாமியின் ‘அடங்காதே’, வெங்கட் பக்கரின் ‘4ஜி’, வள்ளிகாந்தின் ‘செம’, பாபா பாஸ்கரின் ‘குப்பத்து ராஜா', பாலாவின் ‘நாச்சியார்’, ரவி அரசுவின் ‘ஐங்கரன்’ ஆகிய படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இது தவிர கைவசம் ராஜீவ் மேனனின் ‘சர்வம் தாள மயம்’, எழிலின் ‘எக்கடிக்கி போதவு சின்னவாட’ ரீமேக், வெற்றிமாறன் படம், சந்திரமௌலியின் ‘100% லவ்’ ரீமேக், சீமானின் ‘கோபம்’ ஆகியவை உள்ளது.

இதில் ‘100% லவ்’ திரைப்படம் 2011-ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படம். சுகுமார் இயக்கியிருந்த இப்படத்தில் நாகசைத்தன்யா, தமன்னா டூயட் பாடி ஆடியிருந்தனர். இதன் தமிழ் ரீமேக்கை இயக்குநர் சுகுமாரின் ‘கிரியேட்டிவ் சினிமாஸ் NY’ நிறுவனத்துடன் இணைந்து ‘NJ எண்டர்டெயின்மெண்ட்’ நிறுவனம் தயாரிக்கவுள்ளது. அறிமுக இயக்குநர் எம்.எம்.சந்திரமௌலி இயக்கவுள்ள இந்த படத்தில் ஹீரோவாக ‘விர்ஜின் பசங்கத் தலைவர்’ ஜி.வி.பிரகாஷ் குமார் நடிக்கவுள்ளார்.

‘100% காதல்’ என டைட்டிலிட்டுள்ள இந்த படத்தில் ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாக முதலில் ‘பிரம்மன்’ புகழ் லாவண்யா திரிபாதி நடிக்கவுள்ளதாக கூறப்பட்டது. ஆனால், லாவண்யா கால்ஷீட் பிரச்சனை காரணமாக விலகியுள்ளாராம். தற்போது, லாவண்யாவுக்கு பதிலாக ஜி.வி.பிரகாஷுடன் டூயட் பாடி ஆட ‘அர்ஜுன் ரெட்டி’ புகழ் ஷாலினி பாண்டே கமிட்டாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், முக்கிய வேடங்களில் நாசர், லிவிங்க்ஸ்டன், அம்பிகா,யோகி பாபு, சதீஷ் ஆகியோர் நடிக்கவுள்ளனராம். ஜி.வி.பிரகாஷே இசையமைக்கவுள்ள இதற்கு ‘சென்னை எக்ஸ்ப்ரெஸ், தில்வாலே’ புகழ் டட்லி ஒளிப்பதிவாளராக பணியாற்றவுள்ளார். சமீபத்தில், படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்ஸ் வெளியாகி ரசிகர்களிடையே செம லைக்ஸ் குவித்து டிரெண்டானது. அதுமட்டுமின்றி, படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரிக்கச் செய்தது. விரைவில் படத்தின் ஷூட்டிங்கை லண்டனில் துவங்கத் திட்டமிட்டுள்ளனர்.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்