விளம்பரம்
முகப்புகோலிவுட்

துவங்கியது ஜி.வி.பிரகாஷின் புதிய பட ஷூட்டிங்

  | October 11, 2017 11:41 IST
Gv Prakash

துனுக்குகள்

  • நடிகராக ஜி.வி.பிரகாஷ் குமார் கைவசம் 10 படங்கள் உள்ளது
  • டோலிவுட்டில் ‘100% லவ்’ மெகா ஹிட்டானது
  • ஹீரோயினாக ‘அர்ஜுன் ரெட்டி’ புகழ் ஷாலினி பாண்டே நடிக்கவுள்ளார்
'புரூஸ் லீ' படத்திற்கு பிறகு ஹீரோவாக ஜி.வி.பிரகாஷ் குமார் கைவசம் ‘அடங்காதே, 4ஜி, செம, குப்பத்து ராஜா, நாச்சியார், ஐங்கரன், சர்வம் தாள மயம், 100% காதல், கோபம், ரெட்டை கொம்பு’ என அடுத்தடுத்து படங்கள் வண்டிகட்டி நிற்கிறது. இதில் ‘100% காதல்‘ படம் தெலுங்கில் 2011-ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட்டான ‘100% லவ்’ படத்தின் ரீமேக்காம்.

சுகுமார் இயக்கியிருந்த இப்படத்தில் நாகசைத்தன்யா, தமன்னா டூயட் பாடி ஆடியிருந்தனர். இதன் தமிழ் ரீமேக்கை இயக்குநர் சுகுமாரின் ‘கிரியேட்டிவ் சினிமாஸ் NY’ நிறுவனத்துடன் இணைந்து ‘NJ எண்டர்டெயின்மெண்ட்’ நிறுவனம் தயாரிக்கவுள்ளது. அறிமுக இயக்குநர் எம்.எம்.சந்திரமௌலி இயக்கவுள்ள இந்த படத்தில் ‘விர்ஜின் பசங்கத் தலைவர்’ ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாக ‘அர்ஜுன் ரெட்டி’ புகழ் ஷாலினி பாண்டே டூயட் பாடி ஆடவுள்ளார்.

மேலும், முக்கிய வேடங்களில் நாசர், லிவிங்ஸ்டன், அம்பிகா, யோகி பாபு, சதீஷ் ஆகியோர் நடிக்கவுள்ளனராம். ஜி.வி.பிரகாஷே இசையமைக்கவுள்ள இதற்கு கணேஷ் ஒளிப்பதிவு செய்யவுள்ளார். சமீபத்தில், படக்குழுவால் டிவிட்டப்பட்ட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்ஸ் ரசிகர்களிடையே செம லைக்ஸ் குவித்து வைரலானது. தற்போது, படத்தின் ஷூட்டிங்கை பூஜையுடன் இன்று (அக்டோபர் 11-ஆம் தேதி) முதல் துவங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்