முகப்புகோலிவுட்

ஜி.வி.பிரகாஷின் ‘100% காதல்’ டீசர்

  | September 11, 2018 13:06 IST
100 % Kaadhal

துனுக்குகள்

  • நடிகராக ஜி.வி.பிரகாஷ் குமார் கைவசம் 10 படங்கள் உள்ளது
  • டோலிவுட்டில் ‘100% லவ்’ மெகா ஹிட்டானது
  • ஹீரோயினாக ‘அர்ஜுன் ரெட்டி’ புகழ் ஷாலினி பாண்டே நடித்துள்ளார்
‘செம’ படத்திற்கு பிறகு ஜி.வி.பிரகாஷ் குமார் கைவசம் ‘அடங்காதே, 4ஜி, குப்பத்து ராஜா, ஐங்கரன், சர்வம் தாள மயம், 100% காதல், ஜெயில், ஆதிக் ரவிச்சந்திரன் படம், சசி படம், ஏ.எல்.விஜய் படம்’ என அடுத்தடுத்து படங்கள் வண்டிகட்டி நிற்கிறது. இதில் ‘100% காதல்‘ படம் தெலுங்கில் 2011-ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட்டான ‘100% லவ்’ படத்தின் ரீமேக்காம்.

சுகுமார் இயக்கியிருந்த இப்படத்தில் நாகசைத்தன்யா, தமன்னா டூயட் பாடி ஆடியிருந்தனர். இதன் தமிழ் ரீமேக்கை இயக்குநர் சுகுமாரின் ‘கிரியேட்டிவ் சினிமாஸ் NY’ நிறுவனத்துடன் இணைந்து ‘NJ எண்டர்டெயின்மெண்ட்’ நிறுவனம் தயாரிக்கிறது. அறிமுக இயக்குநர் எம்.எம்.சந்திரமௌலி இயக்கும் இந்த படத்தில் ‘விர்ஜின் பசங்கத் தலைவர்’ ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாக ‘அர்ஜுன் ரெட்டி’ புகழ் ஷாலினி பாண்டே டூயட் பாடி ஆடியுள்ளார்.
 

மேலும், முக்கிய வேடங்களில் நாசர், லிவிங்ஸ்டன், அம்பிகா, யோகி பாபு, சதீஷ் ஆகியோர் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷே இசையமைத்து வரும் இதற்கு கணேஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது, படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்